நம்பர் நடிகைக்கும் காப்பி இயக்குநருக்கும் இப்படியொரு கனெக்ஷனா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
சென்னை: கோலிவுட்டில் மார்க்கெட் காலியான நிலையில், நம்பர் நடிகையை மீண்டும் அழைத்து வந்து வாய்ப்பு கொடுத்த காப்பி இயக்குநருக்கும் நம்பர் நடிகைக்கும் அப்படியொரு கனெக்ஷன் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நடன இயக்குநரை பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், கோடம்பாக்கத்தில் புதிதாக எந்த தயாரிப்பாளர்களும் நம்பர் நடிகையை புக் பண்ண முன் வரவில்லை.
அந்த நடிகையும் பக்கத்து ஸ்டேட் படங்களில் கவனத்தை செலுத்த திருப்பினார்.

நீங்க தான் நடிக்கணும்
பிரம்மாண்டத்தின் சிஷ்யனாக இருந்த காப்பி இயக்குநர் தனது அறிமுக படத்தில் நம்பர் நடிகை நடிக்க சம்மதித்தால் தான் படத்தையே இயக்குவேன் என ஒற்றைக் காலில் நின்றார். விருப்பமே இல்லாமல் தான் சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் கால் பதித்தார் நம்பர் நடிகை. ஆனால், அவருக்கான கிரேஸ் குறையாத நிலையில், அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன.

மீண்டும் நம்பர் ஒன்
விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்கிற வெறியில் ஒரேயடியாக நடித்துத் தள்ள மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பல தடைகளை கடந்து நம்பர் நடிகை பெற்றார். ஆரம்பத்தில் ஒதுக்கிய முன்னணி நடிகர்கள் எல்லாம் அவரது சோலோ வளர்ச்சியை பார்த்து மிரண்டு போய் தங்கள் படங்களில் ஹீரோயினாக புக் செய்தனர்.

நெருக்கமான நட்பு
தொடர்ந்து தான் இயக்கும் பெரிய படங்களில் நம்பர் நடிகையை நடித்து வரும் காப்பி இயக்குநருக்கும் நடிகைக்கும் நெருக்கமான நட்பு நீண்ட காலமாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. செல்ல பெயர் வைத்துத் தான் காப்பி இயக்குநர் நம்பர் நடிகையை அழைப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இப்படியொரு கனெக்ஷனா
இந்நிலையில், நம்பர் நடிகைக்கும் காப்பி இயக்குநருக்கும் ஒரு சூப்பரான கனெக்ஷன் உள்ளதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன. அது என்னவென்றால் காப்பி இயக்குநர் எந்த இடத்தில் எல்லாம் வீடு வாங்கி குடி போகிறாரோ அதே இடத்திற்கு நம்பர் நடிகையையும் நம்பி குடியேறி வருவதாக கூறுகின்றனர்.

ஹாட் ஸ்பாட்
சினிமா பிரபலங்கள் பலரும் கண் வைத்து குடி போக துடிக்கும் சென்னையின் ஹாட் ஸ்பாட்டான அந்த இடத்தில் நம்பர் நடிகை வீடு வாங்குவதற்கு முன்பே காப்பி இயக்குநர் தான் வீடு வாங்கினார் என்றும் தற்போது நம்பர் நடிகை இருந்து வரும் இடத்திலும் முன்னதாக காப்பி இயக்குநர் தான் இருந்து வந்தார் என்றும் கூறுகின்றனர்.

வடமாநில படம்
தென்னிந்தியாவில் மட்டுமின்றி வடமாநிலத்திற்கு சென்று அங்குள்ள பெரிய நடிகரின் படத்தை இயக்க ஆரம்பித்துள்ள நிலையிலும் காப்பி இயக்குநர் நம்பர் நடிகையையே ஹீரோயினாக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதா? எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











