»   »  அவருக்கு ஆடி கார்... எனக்கு இன்னோவாவா? ஒரு இயக்குநரின் ஆதங்கம்!

அவருக்கு ஆடி கார்... எனக்கு இன்னோவாவா? ஒரு இயக்குநரின் ஆதங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பசுமையான தயாரிப்பாளர் தனது பட இயக்குநர்களுக்கு கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதில் ஓர வஞ்சனை செய்துள்ளதாக அவர் மீது கடுப்பில் இருக்கிறாராம் காதலர் இயக்குநர்.

பசுமையான தயாரிப்பாளர் தனது உறவினரான அண்ணன் நடிகரை வைத்து சமீபத்தில் ஒரு ரீமேக் படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்கியது காதலர் இயக்குநர். படம் வெற்றி பெற்றது என்று சொல்லி அவருக்கு ஒரு இன்னோவா கார் வாங்கிக் கொடுத்தார்.

Lover director disappoints over his producer

இப்போது வேறு ஒரு தகவல் வருகிறது. தயாரிப்பாளரின் தயாரிப்பில் அடல்ட் காமெடி படங்களாக எடுத்து வருபவர் அந்த இளம் இயக்குநர். அடுத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்க வாய்ப்பு தந்திருக்கிறார் தயாரிப்பாளர். அவருக்கு கடந்த வாரம் புதிய ஆடி க்யூ7 கார் வனக்கி பரிசளித்திருக்கிறாராம் தயாரிப்பாளர். இந்த கார் சுமார் 50 லட்சத்தை தாண்டும். ஆனால் இன்னோவா இதில் பாதி விலை கூட வராது.

தயாரிப்பாளருக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை என்று பரிதாபமாக கேட்கிறாராம் இயக்குநர். அவர் அதிக பட்ஜெட்டில் சின்ன வெற்றியை கொடுத்தவர். இவர் சின்ன பட்ஜெட்டில் பெரிய வெற்றியை கொடுத்தவர் என்று சிரிக்கிறாராம் தயாரிப்பாளர்.

இனி அடல்ட் இயக்குநர்களுக்குதான் காலம் போல...?

Read more about: gossip கிசுகிசு
English summary
That Green producer has gifted innova car to lover director. But he presented audi car to adult film director. After heared this lover director got disappointed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X