»   »  அந்த லேட்டஸ்ட் அவார்டு நிகழ்ச்சில நஷ்டமாமே!

அந்த லேட்டஸ்ட் அவார்டு நிகழ்ச்சில நஷ்டமாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் நடந்த சினிமா விருதுகள் வழங்கும் விழா அது. போன வருடம் வரை நிகழ்ச்சியாக நடத்தாமல் நேரடியாக அவார்டுகளை தந்துகொண்டிருந்தவர்கள், நட்சத்திர சேனல் அவார்டு நிகழ்ச்சி சர்ச்சையாகி நிறுத்தப்பட்டதால் இந்த முறை பிரம்மாண்ட விழாவாக நடத்தியது.

நட்சத்திர சேனலுக்கு நிகழ்ச்சி நடத்திக்கொடுக்கும் ஒரு நிறுவனம்தான் இந்த விழாவையும் நடத்தியதாம்.

விழாவுக்கு உச்ச நட்சத்திரம், உலக நாயகன், தளபதி என டாப் நடிகர்கள் விசிட் அடித்தும் கூட விழாவால் பல லட்சங்கள் நஷ்டமாம்.

நஷ்டத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். ஆட வந்த நடிகைகள் ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டதும், மோடி எஃபக்டால் சரியான ஸ்பான்சர்கள் கிடைக்காததும்தானாம்...

சேனலில் ஒளிபரப்பப்பட இருக்கும் நிகழ்ச்சிக்கும் இன்னும் விளம்பரங்கள் கிடைக்கவில்லையாம். எனவேதான் முன்னோட்டம் என்ற பெயரில் நேற்று முழுக்க ட்ரெய்லர் ஓட்டினார்களாம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say magazine's first award function has made heavy loss to the company and channel.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil