»   »  வாலாட்டிய எஸ்.ஜே. சூர்யா:மாளவிகா கசமுசா புகார்!

வாலாட்டிய எஸ்.ஜே. சூர்யா:மாளவிகா கசமுசா புகார்!

Subscribe to Oneindia Tamil

வியாபாரி படத்தின் பாடல் காட்சியின் போது இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகாவிடம் அத்துமீறி செக்ஸ் குறும்புகள் செய்ததாக புது சர்ச்சைகிளம்பியுள்ளது. இதுதொடர்பாக மாளவிகாவிடம், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சூர்யா மன்னிப்பு கேட்டாராம்.

கிளாமர் ரோல்கள் ஒருபக்கம் மாளவிகாவைத் தொடர்ந்து தேடி வர, சர்ச்சைகளும் கூடவே ஓடி வந்து கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன.ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த மாளவிகா, திருட்டுப் பயலே படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனு பாட்டுக்கு அவர் போட்ட குத்தாட்டம், மேலும் பிரபலமாக்கியது. இதனால் பல புதுப் படங்களில்புக் ஆனார் மாளவிகா.

தொடர்ந்து கிளாமர் கலந்த ரோல்களில் நடிக்க ஆரம்பித்த மாளவிகாவும், சர்ச்சகைளும் பிரிக்க முடியாதவையாக மாறியுள்ளன. முதலில் தெலுங்குப்படம் ஒன்றில், நடிகர் ராஜேந்திர பிரசாத் படுக்கையறைக் காட்சியில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பரபரப்பு குற்றம் சாட்டினார் மாளு.

அந்தப் படத்தில் போர்வைக்குள் கசமுசா செய்வது போன்ற காட்சியை படமாக்கியபோது மெய்யாலுமே மாளவிகா உடலில் விளையாடி விட்டாராம்பிரசாத். கடுப்பாகிப் போன மாளவிகா, போர்வைக்குள்ளிருந்து பொங்கியெழுந்து வெளியேறி படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே வாக் அவுட்செய்தார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் சபரி படத்தின் தயாரிப்பாளர் சந்திரசேகரன் தனக்கு சம்பளப் பாக்கி வைத்திருப்பதாகவும், டம்மி கேரக்டராக தன்னைமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

பதிலுக்கு தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரனும் மாளவிகா மீது புகார் கூறினார். மாளவிகா சூட்டிங்குக்கு ஒழுங்காக வரவில்லை, தங்குவதற்கு 5ஸ்டார் ஹோட்டலில் அறை கேட்டு அடம் பிடித்தார், இவரால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் குறை கூறினார்.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா குறித்த ஒரு புது சர்ச்சையை எழுப்பியுள்ளார் மாளவிகா. எஸ்.ஜே. சூர்யாவுடன் திருமகன் படத்திலும், வியாபாரிபடத்திலும் திறமை காட்டுகிறார் மாளவிகா.

திருமகன் படத்தின் ஷூட்டிங்கின்போது சூர்யாவுக்கும், மாளவிகாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் எழுந்தன.

இந்த நெருக்கம் காரணமாகத்தான் வியாபாரி படத்தில் ஒரு ஹீரோயினாக மாளவிகாவைப் போட சூர்யா ரெக்கமன்ட் செய்ததாக கூறப்பட்டது.

இந்தப் படத்துக்காக கொசு கடிக்குது கொசு கடிக்குது (இன்னா ஒரு அருமையான பாடல் போங்கோ!) என்ற பாடல் காட்சியில் மாளவிகாவும்,சூர்யாவும் சமீபத்தில் நடித்தனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கேரளா ஹவுஸ் என்ற பங்களாவில் இந்தப் பாட்டை படமாக்கினர்.

படு கிளாமரான இந்தப் பாட்டின்போது மாளவிகாவிடம் நெருக்கமாக சூர்யா நடிப்பது போல காட்சியாம். காட்சியின்போது மாளவிகாவின் உடலில்படக் கூடாத இடங்களில் எல்லாம் சூர்யாவின் கை பற்றிப் படர ஆரம்பித்து விட்டதாம். காதலருடன் கல்யாணம் நிச்சயமாகியுள்ள நிலையில்,சூர்யாவின் இந்த செயலால் கடுப்பாகி விட்டாராம் மாளு.

கோபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அத்தனை பேர் முன்னிலையில், சூர்யாவுக்கு செமத்தியான டோஸ் விட்டாராம். அப்செட் ஆன சூர்யா,அங்கேயே மாளவிகாவிடம் ஸாரி சொல்லி விட்டாராம்.

இருந்தாலும் கோபம் அடங்காத மாளவிகா நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்து குறித்து மாளுவினமேனேஜர் முனுசாமி கூறுகையில், மோதல் எல்லாம் இல்லை சார், சுமூகமாகத்தான் உள்ளனர் என்றார்.

இருந்தாலும் மாளவிகா இன்னும் டென்ஷனில்தான் இருக்கிறார் என்றும் 18ம் தேதி இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டி பகிரங்கமாகசூர்யா மீது புகார் சொல்லப் போகிறார் என்றும் பரபரப்பாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே. சூர்யா என்றாலே வில்லங்கம் தானா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil