டிவிக்கு ரெடியாகும் மாளவிகா
கல்யாணம் ஆகிவிட்டதாலோ என்னவோ மாளவிகாவுக்கு மடாரென வாய்ப்புகள் சரிய ஆரம்பித்துவிட்டன.
அவரது நேரம் அடுத்தடுத்து ரிலீசான திருமகன், சபரி, வியாபாரி, அற்புத்தீவு ஆகிய 4 படங்களும் வெற்றி பெறவில்லை. இதனால் மிகவும் வருத்தத்தில் உள்ளார் மாளவிகா.இப்போது கணவருடன் மும்பையில் குடியேறிவிட்ட மாளவிகாவிடம் தமிழில் ஒரே ஒரு படம் தான் கையில் உள்ளது. கட்டுவிரியன் என்ற அந்தப் படம் தவிர வேறு எந்தப் படமும் மாளவிகாவிடம் இல்லை.
இதனால் கல்யாணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் மாளவிகா வருத்தத்தில் இருக்கிறாராம். நான் நடிச்ச 4 படங்களும் ரீலிஸாகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு புதுப்பட வாய்ப்பும் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பதில் தான் சொல்ல வேண்டும்.
இதனால் மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் மாளவிகா.
இது தவிர தொலைக்காட்சி சீரியல்களுக்குள்ளும் நுழைய முடிவெடுத்துள்ளாராம்.
டிவியில வாள மீனா?
Comments
actress arputha theevu அற்புதத்தீவு சபரி டிவி திருமகன் நடிகை பாட்டு புலம்பல் மாளவிகா வாய்ப்பு வியாபாரி chance malavika sabari song tirumagan tv viyabari


Click it and Unblock the Notifications