»   »  கணவர் தடா-அப்செட் மாளவிகா

கணவர் தடா-அப்செட் மாளவிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாளவிகாவுக்கு கடிவாளம் போட ஆரம்பித்துள்ளாராம் அவரது காதல் கணவர்.

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பற்பல படங்களில் நடித்துள்ள மாளவிகாவுக்கும், மும்பையைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான முகேஷுக்கும் சமீபத்தில் கல்யாணம் நடந்தது.

கல்யாணத்திற்குப் பின் ஹாயாக குடும்பம் நடத்த ஆரம்பித்த மாளவிகா, கூடவே படங்களிலும் நடித்து வந்தார். ஜாலியாகப் போய்க் கொண்டிருந்த மாளவிகாவின் குடித்தனத்தில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளதாம்.

முதலில் மாளவிகா கிளாமராக நடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தாராம் முகேஷ். இதையடுத்து கிளாமராக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் மாளவிகா.

ஆனால் இப்போது மாளவிகாவின் மெயின் சுவிட்ச்சிலேயே கை வைத்துள்ளாராம் முகேஷ். இது மாளவிகாவுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளதாம்.

மாளவிகாவின் பாய் பிரண்டுகள் குறித்து அவரது வட்டாரத்திற்கு நன்கு தெதரியும். பாய் பிரண்டுகளுடன் வார இறுதியிலும், இரவு நேரங்களிலும் உல்லாசமாக பார்ட்டிகளுக்குப் போவது மாளுவின் வழக்கம்.

ஆனால் இப்போது இதற்குத் தடா போட்டு விட்டாராம் முகேஷ். இதனால் கடுப்பாகியுள்ளாராம் மாளவிகா.

மேலும் தான் ஊரில் இல்லாதபோது பெங்களூரை விட்டு எங்கும் போகக் கூடாது என்று பொடா போட்டுள்ளாராம் முகேஷ். இப்படி அடுக்கடுக்காக கண்டிஷன் போட ஆரம்பித்துள்ளதால் புருஷனுடன் சண்டை பிடிக்க ஆரம்பித்துள்ளாராம் மாளவிகா.

கல்யாணம் நடந்த அன்று இரவே தனது நண்பர்களுக்காக பெரிய அளவிலான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மாளவிகா. அதில் படு கிளாமரான உடையுடன், பாய் பிரண்டுகளுடன் அட்டகாசமாக ஆடிப் பாடி கொண்டாடினார்.

இதுகுறித்து முகேஷ் முகம் சுளித்தபோது இதெல்லாம் சினிமாத் துறையில் சகஜமப்பா என்று கூறி முகேஷை சமாளித்தார் மாளவிகா என்கிறார்கள்.

ஆனால் அடிக்கடி இப்படி நடந்தால் அது குடும்பத்திற்குள் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்பதால் இப்போது பார்ட்டிகளுக்குத் தடை விதித்துள்ளாராம் முகேஷ்.

முகேஷ் போடும் உத்தரவுகளால் மாளவிகா கடுமையாக அப்செட் ஆகியுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil