»   »  மாளவிகா..ா...ஆ!!

மாளவிகா..ா...ஆ!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வடிவேலு மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அடிதடி விவகாரத்தில் அல்ல, "அலேக்" விவகாரத்தில்.

ராஜ்கிரண் புண்ணியத்தில் இத்தினிகூண்டு கேரக்டரில் அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகின் முன்னணி காமடி ஹீரோவாககக் கலக்கிவரும் வடிவேலு ஒரு காலத்தில் அந்தக்கால நாயகி அம்பிகாவை வளைத்துப் போட்டு கோலிவுட்டையே கதி கலங்க வைத்தார்.

கொஞ்ச நாள், வடிவேலுவே கதி என்று கிடந்தார் அம்பிகா. அப்புறம் அதிலிருந்து வெளியே வந்தார்.

இப்போது இன்னொரு ஸ்வீட்டியைப் பிடித்து ரெக்கார்ட் பிரேக் பண்ணியுள்ளார். வடிவேலுவின் பிடியில் சிக்கியுள்ள அந்த பப்பாளி,மாளவிகாவாம்!!!.

நெசமாலுமே இது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக வடிவேலுவுடன் மாளவிகா ரொம்ப அதிகமாக சுற்றிவருகிறாராம். அதை விட காமெடி, ரஜினியின் சந்திரமுகி படத்திலும் வடிவேலுவுக்கு ஜோடி மாளவிகாதானாம்.

வடிவேலு போகும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மாளவிகாவும் உடன் வருகிறாராம். ரஜினி மகள் கல்யாணத்துக்குக் கூட இருவரும் ஜோடிபோட்டே போய் அசத்தினார்களாம்.

சந்திரமுகி படத்தில் ரஜினிக்கே சரியான ஜோடி கிடைக்காமல் படு திண்டாட்டம் நடந்தது. ஆனால் வடிவேலுவுவே தனக்கு ஜோடியாகமாளவிகாவை போடுமாறு பிரபுவிடம் மன்றாடிக் கேட்டுக் கோண்டாராம்.

சந்திரமுகியில் ரஜினியுடன் படம் முழுக்க வந்து காமடியில் கலக்குகிறாராம் வடிவேலு.

அஜீத், விஜய் என்று ரவுண்ட் வந்த மாளவிகா, சான்ஸ் இல்லாமல் மும்பையிலும் சொந்த ஊர் பெங்களூரிலும் மாடலிங், அக்கடா துக்கடாவேடங்களில் நடித்துக் காலத்தைத் தள்ளினார்.

தெலுங்கிலும் அதிகபட்ச கவர்ச்சியைக் காட்டியாகிவிட்டது. அங்கு இனியும் எக்ஸ்போஸ் செய்ய மிச்சம் மீதி இல்லை. இதனால் அங்கும்வாய்ப்புக்கள் பெரும் அளவில் சரிந்துவிட்டன.

இதையடுத்து கல்யாணம் செய்யும் முடிவில் தனது பழைய காதலர் அஜய்க்கு தூதுவிட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால், அவர் திரும்பிப்பார்க்கவில்லை.

இந் நிலையில் தான் வடிவேலுவின் பிடிக்குள் வந்திருக்கிறார் மாளவிகா !!

வடிவேலு பத்தி பத்த வச்சாச்சு... அப்ப விவேக் பத்தி ஏதாவது சொல்ல வேணானா...

விவேக் கதாநாயகனாக நடித்து வரும் சொல்லி அடிப்பேன் படத்தில் சாயாசிங், தேஜாஸ்ரீ ஆகியோருடன் சேர்ந்து, விவேக் ஆடும் ஒருபாடலை அவரே பாடியிருக்கிறாராம். அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள்...

நீ சிக்குன்னுகீறே..

எனக்கு பக்குன்னு கீது...

கும்முனு போறே..

மனசை அள்ளிட்டுப் போறே...

ஏ அய்யோ.. அய்யோ..!!!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil