நான் நல்லா ஐட்டம் டான்ஸ் ஆடுவேன்.. ஸ்டைல் நடிகருக்கு கொக்கிப் போட்டு சான்ஸ் கேட்ட மலையாள நடிகை?

By Staff

சென்னை: திரைப்படங்களில் அவ்வளவாக எக்ஸ்பிரஷன்கள் காட்டி நடிக்க தெரியவில்லை என்றாலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வரும் அந்த நடிகை ஸ்டைல் நடிகரின் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்காக அப்ளிகேஷன் போட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

முதல் பாகத்தில் விவாகரத்தான நடிகை புருஷனை வெறுப்பேற்ற குட்டி டிரெஸ்ஸில் போட்டக் குத்தாட்டம் பட்டித் தொட்டி எங்கும் பற்றிக் கொண்டு டிரெண்டானது.

ஆனால், ஆடாத ஆட்டம் போட்ட நிலையில், இனிமேல் அப்படி பயங்கரமாக ஆடவே முடியாத நிலைக்கு அந்த நடிகை ஆளாகி விட்டதாக கூறப்படும் நிலையில், இரண்டாம் பாகத்தில் வேறு யாராயாவது பார்த்துக் கொள்ளுங்கள் சாமி என பெரிய கும்பிடாக போட்டிருக்கிறாராம்.

குத்தாட்டத்துக்கு பல கோடி

குத்தாட்டத்துக்கு பல கோடி

அந்த ஸ்டைல் நடிகரின் படத்தில் பிரபல நடிகை ஒருவர் போட்ட குத்தாட்டத்துக்கு அவருக்கு சம்பளமாக பல கோடி ரூபாய் வழங்கபட்டது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இன்னொரு முறை அந்த நடிகையே ஆட்டம் போட்டால் நல்லா இருக்கும் என படக்குழு நினைத்தாலும், ஆடும் நிலைமையில் நடிகை இல்லை என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஹீரோயின் வாய்ப்பு

ஹீரோயின் வாய்ப்பு

பாலிவுட்டில் அடுத்தடுத்த ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருவதால் தான் அந்த இமேஜை காப்பாற்றிக் கொள்ள நடிகை இப்படி அந்த குத்தாட்ட பாடலில் நடனம் ஆட முடியாமல் தவிர்த்து விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகையின் திடீர் முடிவு அந்த ஸ்டைல் நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.

ஐட்டம் டான்ஸுக்கு ரெடி

ஐட்டம் டான்ஸுக்கு ரெடி

இந்நிலையில், சமீப காலமாக கவர்ச்சியில் கிறங்கடித்து வரும் அந்த மலையாள நடிகை ஐட்டம் டான்ஸ் தானே, நான் நல்லா ஆடுவேன் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க என்றே நடிகரை சந்தித்தே கேட்டு விட்டாராம். ஆனால், நடிகைக்கு இந்தியளவில் அந்தளவுக்கு மாஸ் இல்லையே என நடிகர் யோசித்து வருவதாக கூறுகின்றனர்.

அடுத்த படத்தில் நடிக்க சான்ஸ்

அடுத்த படத்தில் நடிக்க சான்ஸ்

மேலும், மலையாள நடிகை ஸ்டைல் நடிகரின் அடுத்த படத்தில் ஜோடி போட்டு நடிக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். முன்னணி ஹீரோக்களுடன் சமீபத்தில் அந்த மலையாள நடிகை ஜோடி போட்டு நடித்த நிலையில், ஸ்டைல் நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக இந்த ஐட்டம் பாடலில் நடிக்கவும் சம்மதித்துள்ளார் என்கின்றனர்.

சம்பளமே தேவையில்லை

சம்பளமே தேவையில்லை

மேலும், ஸ்டைல் நடிகரின் படத்தின் ப்ரோமோஷனுக்காக உருவாக உள்ள அந்த ஐட்டம் பாடலுக்கு தான் நடனமாட எந்தவொரு சம்பளமும் தேவையில்லை என்றும் நடிகை அதிரடியாக ஐஸ் வைத்துள்ள நிலையில், என்ன சொல்வதென்றே தெரியாமல் நடிகர் நடிகையின் கோரிக்கையை பரிசீலனை சொல்வதாக பேசி உள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X