அடிமேல அடி.. இதுல ஆணவப் பேச்சு வேற.. க்ரிஞ்சு காவியமான காதல் படம்.. டென்ஷனான ஓமணக் குட்டி?

By Staff

திருவனந்தபுரம்: மலையாள நடிகை நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்த காதல் படமும் கப்பல் கவிழ்ந்து மூழ்கிய நிலையில், கடும் அப்செட் ஆகி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அந்த பிரபல உலகப் படம் போல இந்த படம் இருக்கும் என பில்டப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், ஆமையை விட மெதுவாக நகரும் கதை மற்றும் எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஒரு பிட்டுக் கூட இல்லையே என கடுப்பாகி படத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தியேட்டர்கள் 2வது ஷோவுக்கே காத்து வாங்க ஆரம்பித்த நிலையில், கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலையில் ஓமணக் குட்டி உட்கார்ந்து இருப்பதாக கேரளாவில் இருந்து காத்து வாக்குல செய்திகள் பரவி வருகின்றன.

இன்னொரு ஃபர்னிச்சர் காலி

இன்னொரு ஃபர்னிச்சர் காலி

கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோஷூட் பேபியாக வலம் வரும் அந்த ஓமணக்குட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஃபர்னிச்சரும் சுக்கு நூறாக உடைந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீப காலமாக அந்த நடிகை நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் வெறிச்சோடி போய் தியேட்டரை விட்டே ஓடி வருவதால் நடிகை மனசு கஷ்டத்தில் உள்ளதாம்.

ஏகப்பட்ட பில்டப்

ஏகப்பட்ட பில்டப்

மீண்டும் தனது ஹோம் கிரவுண்டில் விளையாட முடிவு செய்த அந்த ஓமணக் குட்டிக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்ச்சைகள், கேலி பேச்சுக்கள் கிளம்பினாலும் பரவாயில்லை நிச்சயம் இந்த படத்திற்கு நமக்கு விருதெல்லாம் கிடைக்கும் என நம்பி நடித்தார் அந்த ஓமணக்குட்டி.

நம்பர் நடிகையுடன் வம்பு

நம்பர் நடிகையுடன் வம்பு

தனது படங்கள் வெளியாகும் போது வழக்கமாக நடிகர்களும் நடிகைகளும் ஃப்ரீ ப்ரோமோஷனுக்காக ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்புவார்கள். நம்பர் நடிகைக்கும் இந்த ஓமணக்குட்டிக்கும் வாய்க்கா வரப்பு பிரச்சனை நடைபெற்று வரும் நிலையில், இந்த முறையும் நம்பர் நடிகையை வம்பு இழுத்து நெகட்டிவ் ப்ரோமோஷனை தேடிப் பார்த்தார்.

எதுவும் பலனளிக்கவில்லை

எதுவும் பலனளிக்கவில்லை

என்ன தான் ப்ரோமோஷன் செய்தாலும், கடைசியாக சட்டியில் ஒன்றுமில்லை என்றால் அகப்பைக்கு எப்படி வரும் என்கிற கதை தான். இந்த படமும் மட்ட மல்லாக்க படுத்து விட்டதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகி உள்ளதாக கூறுகின்றனர். இயக்குநர் பெரும் நம்பிக்கை கொடுத்து தன்னை கமிட் பண்ணிவிட்டு இப்படி காலை வாரி விட்டுட்டாரே என அவர் மீது நடிகை கடும் கோபத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

எதிர்பார்ப்பு பூர்த்தியாகல

எதிர்பார்ப்பு பூர்த்தியாகல

அந்த உலகத்தரப் படத்தை போன்ற கதை என்பதால், அந்த படத்தின் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணியது தான் இந்த படம் ஓடாமல் போனதுக்கு காரணமே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ரசிகர்கள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக சுண்டி இழுக்கும் காட்சிகளில் ஓமணக் குட்டி நடித்திருப்பார் என எதிர்பார்த்து போன நிலையில், ஒரு சின்ன பிட்டுக் கூட இல்லை என்பதால் தான் படம் சொதப்பி விட்டதாக கூறுகின்றனர்.

அந்த படம் என்னாகுமோ

அந்த படம் என்னாகுமோ

அடுத்ததாக அந்த வி நடிகர் படத்தில் வேறு ஓமணக் குட்டி கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், அந்த படம் என்ன ஆகுமோ என வி நடிகரின் ரசிகர்கள் இப்பவே கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அந்த படத்தில் இயக்குநர் நிச்சயம் நல்ல கதையை கொடுத்து நடிகையையும் ஹேப்பி ஆக்குவார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X