திருமணமான நடிகருடன் ரகசிய உறவில் மலையாள நடிகை.. தீயாய் பரவும் தகவல்.. ஷாக்கில் திரையுலகம்

By Staff

சென்னை: திருமணமான பிரபல நடிகருடன் மலையாள நடிகை ஒருவர் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

காதலுக்கு பெயர் போன படங்களில் நடித்து வந்த அந்த மலையாள நடிகை சீனியர் நடிகருடன் ஜோடி போட்டு நடித்த நிலையில், அவரது மார்க்கெட் ஒட்டுமொத்தமாகவே காலியானது.

சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத நிலையில், பிரபல நடிகர் ஒருவருடன் ரகசிய குடித்தனம் நடத்தி வருகிறாராம்.

லிவிங் டுகெதர் வாழ்க்கை

லிவிங் டுகெதர் வாழ்க்கை

சில நடிகைகள் திருமண உறவில் பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை. அதற்கு பதிலாக விருப்பப்பட்ட நடிகர்களுடனோ, விளையாட்டு வீரர்களுடனோ, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்துவதே விரும்பி வருகின்றனர். எல்லாமே வெளியே தெரிந்து விட்ட பிறகு திருமணம் செய்து கொள்ளலாமா? அல்லது விலகி விடலாமா? என்கிற திட்டத்திலேயே செயல்பட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மலையாள நடிகை

மலையாள நடிகை

காதல் படங்களுக்கு பெயர் போன பிரபல மலையாள நடிகை தற்போது லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆரம்பத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அந்த நடிகை அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சீனியர் நடிகர்களுக்கு எல்லாம் ஜோடியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

திருமணமான நடிகருடன்

திருமணமான நடிகருடன்

காதல் என்றால் காதல் தானே, ஆணுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்குமே வரும் போது, திருமணமான நடிகருடன் காதல் வரக் கூடாதா? என்ன என்கிற நிலையில், அந்த நடிகை தற்போது திருமணமாகி குழந்தையே இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் கட்டுபாட்டில் ரகசிய லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.

மனைவிக்கு தெரிந்து விட்டது

மனைவிக்கு தெரிந்து விட்டது

நடிகரின் சின்ன வீடு விஷயம் அவரது மனைவிக்கும் தெரிந்த நிலையில், தான் தற்போது வெளியே புகைய ஆரம்பித்துள்ளது என்றும் நடிகரை எதிர்த்து அவரது மனைவியால் ஒன்றுமே செய்ய முடியாத சூழலில் தான் விஷயத்தை கசிய விட்டுள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

விவாகரத்து செய்வாரா

விவாகரத்து செய்வாரா

இந்த விவகாரம் தெரிய வந்த நிலையில், நடிகரை அவரது மனைவி விவாகரத்து செய்தால் ஒட்டுமொத்தமாக நடிகையின் ரகசிய லிவிங் டுகெதர் வாழ்க்கை அம்பலமாகி விடும் எனக் கூறுகின்றனர். இந்த விஷயம் லீக்கானதை அறிந்ததில் இருந்தே நடிகை ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். மனைவிக்காக தன்னை கழட்டி விட்டால், தனது நிலை என்னவாகும் என்றும் யோசித்து வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X