பெண்களுக்கு மட்டுமில்ல ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு.. பீதியை கிளப்பிய நடிகர்!
சென்னை: சினிமாவில் பெண் நடிகர்களுக்கு மட்டுமில்லை ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு என்று வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பிரபல பாடகரின் மகனான இவர்,பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ஒரு சிலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஒல்லி நடிகரின் படத்தில் வில்லனாக நடித்து பெயர் எடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அது மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பாடல் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட்: அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அந்த நடிகர், அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசினார். அதில், எப்படியாவது படத்தில் நடித்துவிட வேண்டும், பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களை சினிமாவில் இருக்கும் சில விஷமிகள் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த ஆசைக்கு பலர் பலியாகி விடுகின்றனர். இந்த மோசமான விஷயம் குறித்து சொல்ல அனைவரும் பயப்படுவார்கள். கிடைத்த வாய்ப்புகள் போய்விடுமோ என்று பயந்து பலர் அதை வெளியில் சொல்வது இல்லை.
இரண்டு பேருக்கும் இதே பிரச்சனை: இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டில் சினிமாவில், ஆண், பெண் என எந்தவித பாகுபாடின்றி நடக்கிறது. சினிமாவில் நுழையும் இளம் நடிகைகள் தான் விஷயத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கும் அந்தரங்க டார்ச்சர் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆண்கள் பாதிக்கப்படுவது அவ்வளவு சீக்கிரம் வெளியில் வருவதில்லை. இந்த பிரச்சினை எல்லாத்துறையிலும் உள்ளது. வணிகம், கார்ப்பரேட் கம்பெனிகளில் போஸ்டிங் கிடைக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
தனிமையில் அழைத்தார்: இதைபோன்ற ஒரு புகாரை பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஒருவர், பொது மேடை என்று கூட பார்க்காமல், சினிமாவில் இருக்கும் அட்ஜெண்ட் மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதாவது,சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறையில் நுழைந்தேன், அப்போது வருமானத்திற்காக கிடைத்த வேலைகளை செய்தேன். ஒரு தயாரிப்பாளரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றேன் அப்போது அவர், நாயை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்தார். அதே போல மற்றொரு நபர் இருட்டான இடத்திற்கு என்னை அழைத்து தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து துறையிலும் அட்ஜஸ்ட்மெண்ட் தலைவிரித்தாடுகிறது.


Click it and Unblock the Notifications











