»   »  மீண்டும் கிசுகிசுவில் மம்தா

மீண்டும் கிசுகிசுவில் மம்தா

Subscribe to Oneindia Tamil

மலையாளத் திரையுலகை கொஞ்ச காலத்திற்கு முன்பு மதமதக்க வைத்த மம்தா மோகன்தாஸ் மீண்டும் கிசுகிசுவில் படு சூடாக அடிபட ஆரம்பித்துள்ளார்.

லங்கா என்ற படத்தில் சுரேஷ்கோபியுடன் இணைந்து படு கிளாமராக நடித்துக் கலக்கியவர் மம்தா. அந்தப் படத்தில் கோபியும், மம்தாவும் இணைந்து படு நெருக்கமாக நடித்திருந்தனர்.

இதை வைத்து இருவரும் மகா நெருக்கமாக பழகி வருகிறார்கள், இருவருக்கும் காதல், விரைவில் கல்யாணம் என்று பலமான கிசுகிசு கிளம்பியது. ஆனால் சுரேஷ்கோபி இதை மறுத்தார். இந்த செய்தியால் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வருத்தப்பட்டார் கோபி.

பின்னர் மம்தா தமிழுக்குத் தாவினார். சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தார். ஆனால் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தெலுங்குப் பக்கம் தாவிப் பார்த்தார். ஆனால் அங்கும் சரிப்படவில்லை.

இதனால் மீண்டும் மலையாளத்துக்கே தாவினார். இந்த நிலையில், மம்தாவையும், சுரேஷ்கோபியையும் இணைத்து மீண்டும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. கோபியும், மம்தாவும் சமீபத்தில் ரகசியமாக துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு ஜாலியாக பொழுதைக் கழித்ததாகவும் மலையாளத் திரையுலகில் படு வேகமாக வதந்தி பரவி வருகிறது.

ஆனால் இந்த செய்தியை இதுவரை மம்தாவும் சரி, கோபியும் சரி மறுக்கவில்லை. மாறாக, மகா அமைதி காத்து வருகின்றனர்.

இருவருக்கும் இடையிலான காதல் இறுகி விட்டதாகவும், இனிமேல் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற ரேஞ்சுக்கு இருவரும் படு நெருக்கமாக பழகி வருவதாகவும் இன்னொரு வதந்தியும் கூறுகிறது.

சுரேஷ்கோபி விரைவில் மம்தாவை மணப்பார் என்றும் அந்த வதந்தி மேலும் கூறுகிறது.

மம்தாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ இல்லையோ, வதந்திகளில் அடிக்கடி அடிபடுகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil