»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மந்த்ராவுக்கு புதுக் காதலர் கிடைத்து விட்டார். இந்த சந்தோஷத்தில் மேலும் 2 சுற்று பெருத்திருக்கிறாராம்.

அசோக் சாம்ராட் என்பவருடன் லவ்விக் கொண்டிருந்த மந்த்ரா அவரைக் கல்யாணம் செய்து கொள்ளவும் ரெடியாக இருந்தார். கல்யாணம்ஆகிவிட்டதாகவும் கூட சொல்கிறார்கள். மந்த்ராவின் குடும்பத்தினர் ரொம்பக் கஷ்டப்பட்டு அசோக்கிடமிருந்து அவரைப் பிரித்தனர்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் காதல் தோல்வியை குடியும், புகையுமாக கொண்டாடிக் கொண்டிருந்தார் மந்த்ரா.

பின்னர் மந்த்ரா தெளிவானார். மளமளவென படங்களும் புக் ஆயின. அவரைத் தெளிவாக்கியவர் ஆகாஷ் என்கிறார்கள். ஆகாஷ் தெலுங்குப் படவுலகில்முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளம் நாயகன். தமிழில் ரோஜாவனம், பெண்கள் என இரண்டு படங்களில் நடித்துள்ளார் ஆகாஷ்.

நடந்ததை மறந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் மந்த்ராவுக்கும், ஆகாஷுக்கும் இடையே மனப் பொருத்தம் அமைந்து விட்டதாம்.இதையடுத்து அடிக்கடி ஓப்பன் மற்றும் ரகசிய சந்திப்புகள் நடக்கிறதாம். காதலும் உறுதியாக வளர்ந்து வருகிறதாம்.

மந்த்ரா, உங்க வீட்டுக்கு இது தெரியுமா...?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil