ரிலீஸுக்கு முன்னாடியே பெரிய ஹீரோக்களை கவுக்க பிளான் போட்ட நம்பர் நடிகை கணவர்.. ஒருத்தரும் சிக்கலையாம்?

By Staff

சென்னை: டாப் நடிகர் டாப் கியர் போட்டுவிட்டு டாட்டா காட்டிவிட்டுச் சென்ற நிலையில், வேலியில போற ஓணானை வேட்டிக்குள் எடுத்துப் போட்டுக் கொண்டது போல அந்த ஒல்லி ஹீரோ மாட்டிக்கிட்டு பல ஆண்டுகளாக முழித்த நிலையில், எதிர்பார்த்தது போலவே படம் டல் அடித்து விட்டது.

ரிசல்ட் எப்படியும் இப்படித்தான் வரும் என்பதை அறிந்த டைரக்டர் எப்படியாவது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ஏதாவது சீன் போட்டு எந்த பிரபல ஹீரோவையாவது தனது அடுத்த படத்துக்கு புக் செய்து விடலாம் என கடந்த 6 மாதமாக ஏகப்பட்ட முயற்சிகளை செய்து வந்தாராம். ஆனால், இதுவரை எந்த ஹீரோவும் சிக்கவே இல்லையாம்.

Many Actors rejected Popular Actress Husband next movie approach
Photo Credit:

அதற்கு முக்கிய காரணம் ஒல்லி நடிகரே மறைமுகமாக சினிமா வட்டாரத்தில் லீக் பண்ண மேட்டர்கள் தான் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சிக்காத தமாஸ் நடிகர்: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக அசத்தி வரும் தமாஸ் நடிகருடன் பல வருடங்களாகவே நல்ல நட்பில் இருந்து வருகிறார் அந்த இயக்குநர் என்கின்றனர். ஆனால், தமாஸ் நடிகர் தான் இவரை பற்றி முழுமையாக தெரிந்த நிலையில், இவரிடம் வந்து சிக்கிக் கொள்ளக் கூடாது என தொடர்ந்து எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கிறார். டாப் நடிகரை தனது மனைவியின் தயவால் கவுக்க முயற்சித்த நிலையிலும், டாப் நடிகருக்கு ரொம்பவே நம்பத்தகுந்த நபர் சொன்ன நிலையில் தான் டாட்டா காட்டிவிட்டார் என்கின்றனர்.

வீண் செலவு தான் சிக்கல்: பெருசா க்ரியேட் பண்ண வேண்டும் என்பதற்காக ரொம்பவே கால தாமதம் செய்வது, அதிகமாக ரீ ஷூட் செய்வது, தேவையில்லாத வீண் செலவுகளை செய்து பட்ஜெட்டை எகிற விடுவது போன்ற விஷயங்கள் தான் டைரக்டருக்கு எதிராக உள்ளது என்றும் அதையெல்லாம் அவர் மாற்றிக் கொண்டால் மட்டுமே சினிமாவில் தொடர முடியும் என்கின்றனர்.

இளம் நடிகர்களுக்கு வலை: பெரிய நடிகர்கள் முதல் சில யங் ஹீரோக்கள் வரை இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்பாகவே கவுத்து விட வேண்டும் என முயற்சித்து வந்தாராம். ஆனால், படம் வரட்டும் பார்த்துவிட்டு சொல்கிறோம் என சில வாரிசு நடிகர்களும் காக்க வைத்த நிலையில், படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சிலர் போன் கூட எடுப்பதில்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X