அவருடன் நடித்தால் வாழ்க்கையே போயிடும்.. பிரபல ஹீரோவிற்கு நோ சொல்லும் நடிகைகள்!
பிரபல ஹீரோ ஒருவருடன் நடித்தால் வாழ்க்கையே போய்விடும் என்று முன்னணி நடிகைகள் புலம்பி வருகிறார்கள்.
சென்னை: பிரபல ஹீரோ ஒருவருடன் நடித்தால் வாழ்க்கையே போய்விடும் என்று முன்னணி நடிகைகள் புலம்பி வருகிறார்கள்.
தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகர் அவர்.தனது படம் வெளியானாலும், ஆகாவிட்டாலும் எப்போது போல அவர் கெத்தாக வலம் வருவார்.
அவருக்கு இருக்கும் ரசிகர்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள். கஷ்டமான காலத்தில் கூட அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும்.

ஆனால் என்ன
ஆனால் ஒரு படம் எடுத்து வெளியிடுவதற்குள் அவர் நிறைய கஷ்டப்படுவார் . கடந்த சில மாதங்களாக அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவர் நடித்து வரும் படத்திற்கும் சரியாக ஷூட்டிங் செல்வதில்லை.

எப்படி இருக்கிறது
இவர் நடிக்கும் படங்களில் பெரிதாக ஹீரோயின் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது பெரிதாக ரீச் ஆகாது. இந்த நிலையில் அந்த ஹீரோவுடன் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் தற்போது தயக்கம் காட்டி வருகிறார்களாம்.

என்ன தயக்கம்
ஆம், அவருடன் நடித்த ஹீரோயின்கள் அதன்பின் சினிமாவில் வாய்ப்பு பெறவில்லை. எவ்வளவு நன்றாக நடித்தாலும் அவர்களுக்கு அதுதான் கடைசி படமாக இருக்கிறது. அவருடன் நடிக்கும் படம் ஹிட் ஆனாலும் கூட அதன்பின் வாய்ப்பு கிடைப்பதில்லை.

அதனால் வேண்டாம்
பல ஹீரோயின்கள் இப்படி வாய்ப்பை இழந்து உள்ளனர்,என்று கூறி வருகிறார்களாம். இதனால் அவரின் படத்தில் சமீப நாட்களில் எல்லாம் புது ஹீரோயின்களை போடவே முடிவு எடுத்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











