ஏகப்பட்ட கத்தி சுத்துது.. மாஸ் நடிகரை முதல் பந்திலேயே டக்கவுட் ஆக்க திட்டம்.. தப்புவாரா?
சென்னை: மாஸ் நடிகர் அரசியல் பக்கம் அடுத்து நகர காத்திருக்கும் நிலையில், ஆரம்பத்திலேயே ஆட்டத்தை கலைக்க வேண்டும் என பலரும் முடிவு செய்து ஏகப்பட்ட தடைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சோஷியல் மீடியாவில் கடந்த ஒரு வாரமாகவே ஏகப்பட்ட ஐடி விங்குகள் 24 மணி நேரமும் ஷிப்ட் போட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
எப்படி ட்ரோல் பண்ணாலும், எந்த சர்ச்சையை கொண்டு வந்தாலும், அனைத்தையும் சமாளிக்க மாஸ் நடிகரும் தனது சோஷியல் மீடியா ஆர்மியை இறக்கி அனைத்தையும் ஆஃப் செய்து வருகிறார்.

ஆனால், ரியல் பஞ்சாயத்தே ஆஃப்லைனில் மாநாடு நடக்கும் அன்று தான் இருக்கு என்கின்றனர். மாஸ் நடிகரை சுற்றி வீசப்படும் ஏகப்பட்ட அருவாக்களில் இருந்து வின்னர் வடிவேலு போல தப்பிப்பாரா? என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முதல் பந்திலேயே டக்கவுட்: மைதானத்துக்கு மாஸ் நடிகர் வருவதற்கு முன்பாகவே மழை பெய்ய வேண்டும் என யாகம் வளர்க்க சிலர் ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர். முதல் பந்திலேயே நடிகரின் அரசியல் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்து அவரை டக் அவுட் ஆக்கி விட வேண்டும் என்றும் ஆட விட்டால் அடுத்து நமக்குத்தான் ஆப்பு என பலரும் பயந்து நடுங்குவதே நமக்கான வெற்றி தான் என தனது ஆர்மியை ஆசுவாசப்படுத்தி வருகிறாராம் மாஸ் நடிகர்.
ஷூட்டிங் முடிந்ததுமே: அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் என்ன தான் கவனமாக இருந்தாலும், நடிகரின் நினைப்பு முழுவதுமே அவரது அரசியல் நுழைவு குறித்து தான் உள்ளதாக கூறுகின்றனர். ஷூட்டிங் முடிந்ததுமே தனது உதவியாளர்களை அழைத்து என்னவெல்லாம் நடக்கிறது. என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் பிரச்சனைகள் கிளம்பும் என்பதை மட்டுமே இரவு பகலாக பேசி வருகிறார் என்று கூறுகின்றனர்.
எல்லாத்துக்கும் ரெடி: சட்ட ரீதியான பிரச்சனை, கூட்ட நெரிசல் பஞ்சாயத்து, மது குடித்து விட்டு போடுவோர் அட்டகாசம், ட்ரோல்கள், மீம்கள் என நடிகரை எப்படியெல்லாம் அட்டாக் செய்ய முடியுமோ அந்த வகையில் எல்லாம் சிக்கல்களை கொடுக்க பலரும் பக்காவாக திட்டமிட்டு வரும் நிலையில், அதை எல்லாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதற்கு அனைத்து வகையிலும் மாஸ் நடிகர் ரெடியாகி விட்டதாக கூறுகின்றனர். எதிர்பாராத அட்டாக் ஏதாவது வந்து சிக்குவாரா? அல்லது அசால்ட்டு பண்ணுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











