ஒல்லி நடிகரை பார்த்து ஓட்டம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்.. கேட்டா ஏகப்பட்ட காரணங்கள் சொல்றாங்க!

By Staff

சென்னை: ஒரு சில இயக்குநர்கள் படங்களை தவிர்த்து பார்த்தால் ஒல்லி நடிகரின் நடிப்பால் எந்த படமும் ஓடவே இல்லை என புதிய டிரெண்டை கோடம்பாக்கத்தில் கிளப்பி உள்ளனர்.

சமீபத்தில் அந்த நடிகர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், புதிய தயாரிப்பாளர்கள் அவர் பக்கமே தலை காட்டாமல் தெறித்து ஓடி விடுகிறார்களாம்.

ஃபிளாப் மட்டும் இதற்கு காரணம் இல்லை என்றும் நடிகரின் விவாகரத்து மேட்டர் தான் பெரிய பிரச்சனையே என்றும் பரபரப்பான பேச்சுக்கள் எழுந்துள்ளது தான் அதிர்ச்சியை தருகிறது.

பெரிய இடத்து மாப்பிள்ளை

பெரிய இடத்து மாப்பிள்ளை

ஒண்ணுமே இல்லாமல் இருந்து வந்த அந்த ஒல்லி நடிகர் பெரிய இடத்துக்கு மாப்பிள்ளையாக மாறியதும் தான் அவர் வாழ்க்கையே பிரைட்டாக மாறியது என்றும் வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் என்றும் ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றன.

தொடர் ஃபிளாப்

தொடர் ஃபிளாப்

நடிகரை எந்த இடத்தில் யாரை வைத்து எப்படித் தட்ட வேண்டும் என்பது அந்த பெரிய இடத்துக்குத் தெரியும் என்றும், அதன் காரணமாகவே நடிகர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன என்றும் நடிகரின் ரசிகர்களே தோல்விக்கு காரணம் மாமனார் தான் என்கிற ரீதியில் புரளிகளை கிளப்பி வருகின்றனராம்.

சரக்கு இல்லை

சரக்கு இல்லை

ஆனால், குறிப்பிட்ட அந்த ஒரு இயக்குநர் இல்லை என்றால் நடிகரின் கரியர் இந்த அளவுக்கு முன்னேறியிருக்காது என்றும் அந்த நடிகரின் ஹேட்டர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கிடையே, மீண்டும் அந்த இயக்குநருடன் நடிகர் இணைந்து படம் பண்ணவே வாய்ப்பில்லை என்றும், அந்த இயக்குநரை மடைமாற்றி விட்டதற்கு பின்னணியிலும் பெரிய சதி நடந்திருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

உச்சத்துக்கு கோபம்

உச்சத்துக்கு கோபம்

மகன் மாதிரி நினைத்து சினிமாவில் வளர்த்து விட்ட உச்ச நடிகருக்கு இப்படியொரு மனக் கஷ்டத்தை கொடுத்து விட்டாரே என அவர் கோபமாக இருப்பதாகவும் அதன் காரணமாக நடிகருடன் புதிதாக யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என கிளம்பிய புரளிகளை நம்பியே பல தயாரிப்பாளர்கள் நடிகர் பக்கத்திலேயே போகாமல் வேறு நடிகர்களை தேடி போகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

முன்னணி நடிகர்களுக்கு அடுத்து நாமத்தான் இருக்கிறோம் என இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டு பல வழிகளில் பெயரைக் கெடுத்துக் கொண்ட அந்த நடிகருக்கு தற்போது பல முனைப் போட்டிகள் உருவாகி உள்ளன. நடிகரின் அடுத்தடுத்த லைன் அப்களும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக இல்லாத நிலையில், மீண்டு எழுவது ரொம்பவே கஷ்டம் என்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த செல்வாக்கும் டோட்டலாக வாஷ் அவுட் ஆகி வருவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X