கல்யாணம் ஆனால் என்ன? தாராள கிளாமருக்குத் தயார்.. பாலிவுட்டில் கொடி நாட்ட நடிகை எடுத்த முடிவு
சென்னை: திருமணத்திற்கு பிறகு நடிகைகள் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள் என்ற கருத்து சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. திருமணமான பிறகும் முன்னணி நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதுடன், தங்களது மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். சிலர் திருமணத்திற்கு பிறகுதான் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில், தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்கு செல்ல திட்டமிட்டு வரும் ஒரு பிரபல நடிகையின் முடிவு தற்போது திரையுலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல வெற்றி படங்களில் நடித்துள்ள அந்த நடிகை, திருமணத்திற்கு பிறகும் தனது சினிமா பயணத்தில் எந்தவித சமரசமும் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பாலிவுட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் அந்த நடிகை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தி சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்காக அங்குள்ள ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்யவும் தயாராக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தாராள கிளாமருக்கும் ரெடி: இதுவரை குடும்ப பாங்கான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த அந்த நடிகை, இனி வரும் காலங்களில் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது. திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக எந்தவித கட்டுப்பாடுகளையும் தன் மீது தானே விதித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும், ஒரு நடிகையாக தன்னுடைய வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்றும் கூறப்படுகிறது. வர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், பிரம்மாண்ட பாடல் காட்சிகள் மற்றும் துணிச்சலான கதாபாத்திரங்கள் வந்தாலும் கேட்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைக் கேட்டு நடிகையின் குடும்பத்தினரும், அவரை நீண்ட காலமாக பின்தொடர்ந்து வரும் சில ரசிகர்களும் ஆச்சரியத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்வம்: இதன் காரணமாகவே சமீபத்தில் அவருக்கு வந்த சில இந்தி பட வாய்ப்புகள் குறித்து அவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டில் ஒரு வலுவான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் அந்த நடிகையின் இந்த முடிவு, திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது அந்த நடிகை யார் என்பது குறித்து சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பல்வேறு யூகங்கள் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications