திருமண வதந்தியை கிளப்பி விட்டதெல்லாம் வீணாப் போச்சே.. நினைச்சது நடக்கலையே.. புலம்பும் வாரிசு!

By Staff

சென்னை: வாரிசு நடிகருக்கும் அந்த புசுபுசு நடிகைக்கும் காதல் என்றும் சீக்கிரமே திருமணம் ஆகப் போகிறது என பரவிய வதந்திக்கு காரணமே அந்த நடிகர் தானாம்.

ஆனால், எதற்காக இப்படியெல்லாம் பித்தலாட்ட வேலைகளை செய்தாரோ கடைசியில் அவர் நினைத்தது எல்லாம் நடக்காமல் ஒட்டுமொத்த திட்டமும் வீணாய் போய்விட்டதாக அந்த நடிகர் புலம்பி வருகிறாராம்.

காலங் காலமாக சினிமாவில் கொடிகட்டி பறந்த குடும்பத்தின் வாரிசுக்கு இப்படியொரு மோசமான சூழ்நிலையா? என்று கோடம்பாக்கமே ஃபீல் செய்து வருகின்றனர்.

வாரிசு நடிகர்

வாரிசு நடிகர்

தாத்தா, அப்பா என எல்லாருமே சினிமாவில் நல்ல நடிகர்கள் என பெயர் எடுத்து ஏகப்பட்ட பாராட்டுக்களை அள்ளிய நிலையில், பெரிய கைகளில் பிள்ளையை ஒப்படைத்தும் எதிர்பார்த்த அளவுக்கு பெயர் கிடைக்காமல் சொதப்பி வருவது ஒட்டுமொத்த குடும்பத்திற்கே சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

விடாமுயற்சியால்

விடாமுயற்சியால்

சினிமா பின்னணியே இல்லாமல் வெறும் தனிப்பட்ட முயற்சியால் அந்த நடிகருக்கு பிறகு வந்த இளம் நடிகர்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், இவருக்கு புதிதாக படம் தரவே பல தயாரிப்பாளர்களும் கதை சொல்ல இயக்குநர்களும் யோசித்து வரும் நிலை உள்ளது.

திருமண வதந்தி

திருமண வதந்தி

இந்நிலையில், நடிகருக்கும் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்த அந்த புசுபுசு நடிகைக்கும் இடையே காதல் என்றும் சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என வதந்திகள் கிளம்பின. அதற்கு ஏற்றார்போல நடிகரும் திடீரென இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இந்த முறை விஷேச ஏற்பாடுகள் எல்லாம் செய்து ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருந்தார்.

வீணாப்போச்சே

வீணாப்போச்சே

ஆனால், அந்த நடிகர் திட்டமிட்டு போட்ட பிளான் எல்லாம் கடைசியில் வீணாகப் போச்சு. இதெல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக் என ரசிகர்களே ட்ரோல் செய்து பங்கம் செய்து விட்டனர். ஏன் இப்படியொரு வதந்தி கிளம்பியது என்றால், அந்த நடிகர் நடிப்பில் புதிதாக ஒரு படம் ரிலீசான சத்தமே கேட்காமல் ஃபிளாப் ஆனது தான் காரணம். அதற்காகத்தான் அந்த திருமண வதந்தி கிளப்பி விடப்பட்டதே என்கின்றனர்.

ஒட்டிக் கொண்டு

ஒட்டிக் கொண்டு

ஏதாவது பெரிய நடிகருடன் ஒட்டிக் கொண்டு நடித்தால் மட்டும் தான் ஓரளவுக்கு சினிமாவில் நீடிக்க முடியும் என்றும் அவருக்கு பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர். விரல் நடிகருடன் இணைந்து நடித்து வரும் அந்த படம் மட்டுமே இப்போதைக்கு அந்த வாரிசு நடிகருக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளது. ஆனால், அந்த படமும் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் வந்தால் தான் சக்சஸ் ஆகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X