நடிகரின் வலையில் விழுந்த மேக்கப் ஆர்டிஸ்ட்.. குடும்பமே சீரழிந்தாலும் கவலைப்படாத நடிகர்!

By Staff

சென்னை: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் இப்போது எங்கு பார்த்தாலும் ஒரு இளம் நடிகரின் "லீலைகள்" பற்றிய பேச்சு தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையில் குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து, ரசிகர்களிடம் நல்லவர் போலப் பெயரெடுத்த அந்த நடுத்தர வயது நடிகர், நிஜ வாழ்க்கையில் படு லோலாக்காக வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.

சமீபகாலமாக, அவரது படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் ஒரு இளம் மேக்கப் ஆர்டிஸ்ட் (Makeup Artist) பெண்ணுடன் அந்த நடிகருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் திறமையைப் பாராட்டுவது போலத் தொடங்கி, பின்னர் அந்தப் பெண்ணுக்குப் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மெல்ல மெல்லத் தன் வலையில் வீழ்த்தியுள்ளார் அந்த நடிகர்.

சீரழிந்த குடும்பம்: அந்த மேக்கப் ஆர்டிஸ்ட் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தையும் இருப்பதாகத் தெரிகிறது. நடிகரின் சொகுசு வாழ்க்கையையும், அவர் காட்டிய ஆசைகளையும் நம்பிய அந்தப் பெண், தன் கணவர் மற்றும் குடும்பத்தைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார்.

கோலிவுட் டாக்: நடிகரின் இந்தத் தொடர்பால் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் தினமும் சண்டை வெடித்து, தற்போது அவரது கணவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம். ஒரு நடுத்தரக் குடும்பமே இதனால் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளது.

Married Makeup Artist Trapped in Actor s Charm Shocking Kollywood Gossip Creates Industry Buzz

கவலைப்படாத நடிகர் - அடுத்த சில்மிஷத்துகும் தயார்: தன் பின்னால் ஒரு குடும்பமே சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் அந்த நடிகருக்குக் கடுகளவும் கவலையில்லையாம். "அவளாக ஆசைப்பட்டு வந்தாள், நான் என்ன செய்ய முடியும்?" என்ற ரீதியில் படப்பிடிப்புகளில் செம்ம கெத்தாக வலம் வருகிறாராம்.

அதுமட்டுமின்றி, தற்போது அந்தப் பெண்ணிடம் இருந்தும் மெல்ல விலகத் தொடங்கியுள்ள நடிகர், தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ள புதுமுக நடிகை ஒருவருக்கு ரூட்டு போடத் தொடங்கிவிட்டதாகப் படக்குழுவினர் கிசுகிசுக்கின்றனர். திரையில் உத்தமனாக நடிக்கும் நடிகரின் இந்த நிஜ முகம் தெரிந்து, திரையுலகைச் சேர்ந்த பலரே "இவரெல்லாம் ஒரு மனுஷனா?" எனத் தூற்றி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X