திருமண வயதில் மகன்.. நடிகைக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்.. வயசு ஆனாலும் ஆசை அடங்கலயே
சென்னை: தென்னிந்திய சினிமாவில் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து, தற்போது ஊரே வியக்கும் அளவுக்கு மாஸ் ஹீரோவாக பிஸியாக இருக்கும் அந்த வாரிசு நடிகருக்கு, இப்போது நிஜ வாழ்க்கையில் 'ரிஸ்க்' எடுப்பதுதான் பிடிச்சிருக்காம். வயசானாலும் ஆசை அடங்கல என்று தென்னிந்திய சினிமா வட்டாரமே இவரைப் பார்த்துதான் ரகசியமாகப் பேசிக் கொள்கிறது.
நடிகருக்கு திருமணமாகி, தற்போது மகன் திருமண வயதை எட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். குடும்பமே இவரை நம்பி இருக்கும் சூழலில், நடிகர் சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் இண்டஸ்ட்ரியில் ஹாட் டாபிக். ஆரம்பத்தில் நட்பு என்று ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் அந்த நடிகையின் கண்ணசைவுக்கு ஆடும் அளவுக்கு நடிகரை மாற்றிவிட்டது.
"மகன் வளர்ந்து கல்யாண வயசுல நிற்கிறான், இந்த நேரத்துல இப்படி ஒரு தேவையா?" என்று நடிகரின் குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நடிகர் கேட்பதாக இல்லையாம்.

நடிகை கேட்கும் காஸ்ட்லி பரிசுகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் என அனைத்தையும் நடிகர் வாரி வழங்கி வருகிறார். நடிகையின் பிடிவாதம் காரணமாக, குடும்ப நிகழ்ச்சிகளை விட அந்த நடிகையுடன் செலவிடும் நேரமே இப்போது நடிகருக்கு அதிகமாகிவிட்டதாம். தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றியோ, தன் இமேஜ் பாதிக்கப்படுமே என்றோ கவலைப்படாமல், அந்த நடிகை காட்டும் மாய உலகத்திலேயே நடிகர் மிதந்து கொண்டிருக்கிறார்.
நடிகையை விலகாத நடிகர்: விளைவு? வீட்டில் தினமும் சண்டை சச்சரவுதான். மனைவியும், மகனும் எவ்வளவோ கண்டித்தும் நடிகர் அந்த நடிகையை விட்டு விலகத் தயாராக இல்லை. "வயசுக்கு வந்த பையன் முன்னாடி இப்படி நடந்துகிட்டா என்ன மரியாதை இருக்கும்?" என்று சொந்த பந்தங்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.
ரிஸ்க்கில் குடும்பம்: சினிமாவில் எத்தனையோ சவால்களைச் சந்தித்து ஜெயித்த நடிகர், இப்போது ஒரு நடிகையின் பிடியில் சிக்கி, தன் சொந்த வாழ்க்கையையும், இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு சேர்த்த பெயரையும் 'ரிஸ்க்'கில் வைத்துள்ளார். வயதானாலும் இந்த ஆசை அடங்காத ஆட்டத்தால், நடிகரின் குடும்பத்தில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்!


Click it and Unblock the Notifications