For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தலைவரே.. தலைவரே.. வேணாம் தலைவரே.. கெஞ்சும் ரசிகர்கள்.. கேட்காத மாஸ் ஹீரோ.. என்ன பண்ணாரு தெரியுமா?

  By Staff
  |

  சென்னை: நான் புடிக்கிற முயலுக்கு மூணு கால் என கெத்தாக திரிந்து தான் சமீபத்தில் அவரது ரசிகர்களே வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு அரிய காவியம் ஒன்றில் நடித்து முடித்தார்.

  இந்நிலையில், அடுத்ததாக டாப் ஹீரோவே இதுவரைக்கும் உடைச்சது போதும், என கழட்டி விட்ட இயக்குநருக்கு சிகப்பு கம்பளம் போட்டு இங்கே வாங்க என அழைத்து இருப்பது ரசிகர்களை உச்சகட்ட வேதனையில் ஆழ்த்தி உள்ளதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

  பான் இந்தியா ரேஞ்சுக்கு தலைவர் யோசிப்பாருன்னு பார்த்தால், பழைய தெலுங்கு பட ரேஞ்சுக்கே யோசிக்கிறாரே என ரசிகர்கள் புலம்பித் தொடங்கி உள்ளனர்.

  விஜய்யை இப்பொழுது பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாக தெரிகிறார்.. நடிகை சங்கீதாவிஜய்யை இப்பொழுது பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாக தெரிகிறார்.. நடிகை சங்கீதா

  நூல் அளவு தான் வித்தியாசம்

  நூல் அளவு தான் வித்தியாசம்

  தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் நூல் அளவு தான் வித்தியாசம் என சொல்லுவார்கள். அது சற்றே சறுக்கினாலும், சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலாக மாறும் என்பதை சமீபத்தில் மாஸ் ஹீரோ நடித்த அந்த பயங்கரமான படமே பெரிய சான்றாக அமைந்து விட்டது. ஏற்கனவே டாப் நடிகரை தலைகீழாக குதிக்க விட்டு அலம்பல் பண்ண அந்த இயக்குநருடன் அடுத்ததாக நடிக்கப் போகிறேன் என அடம்பிடித்து அழைத்து இருக்கிறாராம் மாஸ் ஹீரோ.

  ஒரே மசாலா தான்

  ஒரே மசாலா தான்

  கிளாஸ் அண்ட் மாஸாக படம் எடுத்தால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு ஒரு முறைக்கு 10 முறை சென்று சில்லறைகளை சிதற விடுவார்கள். ஆனால், ஒரே அரைத்த மசாலாவையே திரும்ப திரும்ப வேறு வேறு பிராண்ட் பாக்கெட்டுகளில் போட்டு அரைத்து வரும் அந்த மசாலா இயக்குநர் திடீரென மாஸ் ஹீரோவை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளாராம்.

  ஒரு முடிவோட

  ஒரு முடிவோட

  தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களுக்கு மறக்க முடியாத சம்பவத்தை பண்ணியாச்சு, அந்த ஹீரோவை மட்டும் எப்படி சும்மா விடுவது என ஒரு முடிவோடு காத்திருக்கும் அந்த இயக்குநர் தொடர்ந்து நச்சரித்து வந்த நிலையில், மாஸ் நடிகரால் நோ சொல்ல முடியாமல் வாங்க, கதையை சொல்லுங்க கேட்போம் என சொல்ல அடுத்த நொடியே அங்கே ஆஜர் ஆகி விட்டாராம்.

  ஒதுங்கும் நடிகர்கள்

  ஒதுங்கும் நடிகர்கள்

  பிரைட் நடிகருடன் ஒரு படம், மீண்டும் டாப் நடிகருடன் ஒரு படம் என பல கதைகளை பாக்கெட்டிலே வைத்துக் கொண்டு இருந்தாலும், உஷாரான அந்த இரு நடிகர்களும், ஒரு இரண்டு மூணு வருஷத்துக்கு நாங்க ரொம்ப பிசி என சொல்லி ஒதுங்கிக் கொண்டார்களாம். இந்த நடிகர் தான் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவாரே, இவரை போட்டு ஒரு அமுக்கு அமுக்குவோம் என கொக்கிப் போட்ட இயக்குநரின் தூண்டிலில் தானாக வந்து மாட்டிக் கொண்டாராம் அந்த மாஸ் நடிகர்.

  கதை நல்லாருக்கு

  கதை நல்லாருக்கு

  பெரிய எதிர்பார்ப்பே இல்லாமல் கதையை கேட்க உட்கார்ந்த அந்த மாஸ் நடிகரை எப்படியாவது கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என நினைத்த இயக்குநர் கதை சொன்ன விதத்திலேயே மாஸ் நடிகர் மொத்தமாக ஹேப்பி ஆகி விட்டாராம். கதை ரொம்ப நல்லாருக்கு, நிச்சயம் பண்றோம் என்றும் உறுதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  ரசிகர்கள் கெஞ்சல்

  ரசிகர்கள் கெஞ்சல்

  ஆனால், அந்த இயக்குநர் கதை சொல்லும் போதெல்லாம் நல்லா தான் இருக்கும் ஆனால், திரைக்கதையாக ஸ்க்ரீனில் காட்சிகளாக வரும் போது தான் க்ளீஷேவாக இருக்கும். அவர் நமக்கு வேண்டாம் தலைவரே, இப்போதான் ஒருத்தரை நம்பி ஏமாந்தீங்க, கொஞ்சம் உஷாரா இருங்க என ரசிகர்களே அட்வைஸ் செய்து வருவது தான் இதில் ஹைலைட்டே!

  English summary
  Masala Director met with Mass actor at his home recently for next movie discussion shocks his fans. Many of them send requests to actor to avoid this collaboration.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X