நான் துணை நடிகன் தான்.. இயக்குநர் தன்னை ஏமாற்றி விட்டார்.. புலம்பும் மாஸ்க் நடிகர்!
சென்னை: மாஸ் நடிகராக மாற வேண்டும் என அகல கால் வைத்து வரும் இளம் நடிகர் தற்போது மாஸ்க் நடிகர் ஆகியுள்ளார்.
அந்த படத்திற்கு தான் தான் கதாநாயகன் என நினைத்துக் கொண்டு நடித்த இளம் நடிகருக்கு படம் வெளியானதும் தான் தன்னை துணை நடிகராக அந்த இயக்குநர் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் கடும் அப்செட்டில் தனக்கு நெருங்கியவர்களிடம் அந்த இயக்குநர் தன்னை ஏமாற்றி விட்டார் என புலம்பி வருகிறாராம்.

முதல் படம்
நண்பன் இயக்குநரின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தனக்கும் ஒரு மாஸ் வெற்றி கிடைக்க வேண்டும் என உடனடியாக அந்த இயக்குநரை யங் நடிகர் புக் செய்தார். ஆனால், முதல் படம் கொடுத்த வெற்றியை இரண்டாவது படம் பெரிய அளவில் கொடுக்க தவறியுள்ளது.

ஏகப்பட்ட ஓட்டை
இதுபோன்ற கதைகளில் லாஜிக் மீறல்கள் சிறிதளவு இருக்கலாம். ஆனால், படம் முழுவதுமே ஏகப்பட்ட ஓட்டைகளை வைத்துக் கொண்டு வெறும் வாய் வார்த்தைகளால் நல்ல படமாக்க அவர்கள் ஒட்ட வைத்த எல்லாம் மறுபடியும் பிய்த்துக் கொண்டு ஓட்டையாகியுள்ளன.

பெய்ட் ரிவ்யூ
முதல் நாளில் படம் அப்படி இருக்கு.. இப்படி இருக்கு என இணையத்தில் பெய்டு ரிவ்யூ மூலம் போடப்பட்ட மாயாஜால சர்க்கஸ் விளையாட்டெல்லாம், இரண்டாம் நாளிலே வெளுத்து அந்த படம் குறித்த ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் இல்லாமல் போய்விட்டது.

அதுக்கு இது பரவாயில்லை
யங் நடிகர் நடித்த முந்தைய படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என்றே படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டின் சூப்பர் படம் என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் வரவில்லை என்கிற பேச்சுத் தான் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

துணை நடிகர்
இந்த படத்தின் கதாநாயகன் இவர் தான் என நினைத்தால், டைட்டிலில் மட்டும் தான் இவர் நாயகனாக இருக்கிறார். படத்தில் பார்த்தால், இவருக்கு துணை நடிகர் கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாஸ்க் நடிகரின் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











