Just In
- 50 min ago
சாத்தானாக பெரியாரை சித்தரித்தாரா செல்வராகவன்? சர்ச்சையை கிளப்பிய பேட்டி.. மன்னிப்பு கேட்டு ட்வீட்!
- 55 min ago
ரம்யா பாண்டியன் மாதிரி.. ஒற்றை வேட்டி கட்டி.. கிறங்கடிக்கும் மோனிஷா
- 1 hr ago
வேற லெவல் கங்கனா...மகளிர் தினத்தில் வெளியிடப்பட்ட தலைவி புரோமோ வீடியோ
- 1 hr ago
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு.. சீக்கிரம் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!
Don't Miss!
- Education
மொத்தம் 2000 மத்திய அரசு பணியிடங்கள்! ஊதியம் ரூ.40 ஆயிரம் ஊதியம்!
- Sports
முதல்ல பந்த்... இப்ப அஸ்வின்... டெஸ்ட் போட்டிகள்ல நாங்கதான் டாப்... நெஞ்சை நிமிர்த்தும் வீரர்கள்!
- News
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு - அரசுக்கு உத்தரவு
- Finance
WTO-விடம் புலம்பிய சீனா.. இந்தியாவின் FDI விதிகள்.. 200 ஆப்கள் தடை.. இரு நாடுகளுக்கும் பிரச்சனை..!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!! ரூ.5,000 சேமிக்கலாம்!
- Lifestyle
இந்த 6 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த டீலிங்.. விடாத தயாரிப்பு நிறுவனம்.. வேறு வழியில்லாமல் ஓகே சொன்னாரா மாஸ் நடிகர்?
சென்னை: முன்பு மாதிரி வெற்றிப் படங்களை கொடுக்க முடியாமல் திணறி வரும் அந்த நோலன் இயக்குநருக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பை அந்த மாஸ் நடிகர் வழங்க டீலிங் ஒன்று தான் காரணம் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.
டீச்சர் படத்தில் நடித்து வரும் மாஸ் நடிகர், திட்டமிட்ட தேதியில், அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாதோ என்ற ஏக்கத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்தும், இயக்குநர் குறித்தும் உறுதியான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றன.

மறுபடியும் இவரா
சமீபத்தில் உச்ச நடிகரை வைத்து அந்த நோலன் இயக்குநர் இயக்கிய அந்த காக்கிச்சட்டை படம் தியேட்டர்களில் ரசிகர்களுக்கு தாலாட்டு பாடி தூங்க வைத்தது. பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் கல்லா கட்டாத அந்த படம், இந்த ஆண்டின் மெகா சொதப்பல் லிஸ்டில் இணைந்துள்ளது. இந்நிலையில், மாஸ் நடிகரின் அடுத்த படத்தை நோலன் இயக்குநர் இயக்கப் போவது உறுதியாகி உள்ளது.

வைரஸ் போல வதந்தி
மாஸ் நடிகரின் அடுத்த படத்தை அந்த இயக்குநர் இயக்குகிறார், இந்த இயக்குநர் தான் கன்ஃபார்ம் என ஏகத்துக்கும் வதந்திகள் கொரோனா வைரஸை விட வேகமாக பரவின. ஆனால், கடைசியில் எல்லாம் வைரஸ் அல்ல வதந்திகள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அந்த நோலன் இயக்குநர் தான் என்கிற புதிய பீதி ரசிகர்களை பயம் கொள்ள செய்துள்ளது.

கிடைக்கல
அய்யோ மறுபடியும் இவரா? ரொம்ப தவறான முடிவு, ராங் சாய்ஸ், மாஸ் நடிகரே கொஞ்சம் யோசியுங்க என அவரது ரசிகர்கள், இந்த புதிய கூட்டணிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்காமல், எண்ட் கார்டு போடும் வேலைகளை பார்த்து வருகின்றனர். வேறு ஆள் கிடைக்காமல் தான் இந்த இயக்குநருடன் இணைகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

அந்த டீலிங்
இந்த கூட்டணிக்கு காரணமே அந்த டீலிங் தான் என்ற புதிய தகவல் ஒன்றும் தற்போது கோலிவுட் கோடாங்கி செவிகளுக்கு கசிந்துள்ளது. அது என்னவென்றால், அந்த அரசியல் படத்தால், ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட இருவரும் மீண்டும் இணைந்து உழைக்க வேண்டும் என்பது தானாம்.

உச்சத்தில் மார்க்கெட்
அந்த மாஸ் நடிகர் தற்போது எதை தொட்டாலும் பொன்னாகிறது என்பதால், அவருடைய உச்சத்தில் இருக்கும் மார்க்கெட்டை மீண்டும் ஒரு முறை பயன்படுத்தி காசு பார்க்கவே அந்த தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும், அந்த மாஸ் நடிகர் அரை மனதுடனே இந்த கூட்டணிக்கு சம்மதித்துள்ளார் என்றும் பேசிக் கொள்கின்றனர்.