பந்தயம் பெருசா இருக்கு.. பயத்துல மாஸ் நடிகர்.. கடைசி படம் கவுத்துக்கிச்சுன்னா?.. இப்போவே கண்ண கட்டுதே!

By Staff

சென்னை: உச்ச நடிகருடன் தொடர்ந்து போட்டா போட்டி போட்டு வந்து டாப் நடிகராக மாறிய மாஸ் நடிகர் கடந்த சில நாட்களாக உச்ச நடிகரின் படத்தின் பிசினஸ் குறித்த தகவலை கவனமாக வாட்ச் செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எப்போதுமே இந்த வேலையை பார்த்து வந்த நடிகர் இந்த முறையும் அதை தவறாமல் பார்த்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தில் அனைத்து இடங்களிலும் தனது ஆட்களை போட்டு டேட்டாவை கலெக்ட் செய்து வருகிறார். ஏற்கனவே தனது அட்மின் ஆட்கள் உச்ச நடிகரின் படக்குழுவினருடன் ஒட்டி உறவாடி வரும் நிலையில், அவர்கள் சொன்ன ரிப்போர்ட்டுகள் எல்லாம் நடிகருக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Mass Actor afraid after knowing about the Star Actor recent business numbers

இந்த முறையும் பெரிய இலக்கை உச்ச நடிகர் செட் செய்து விட்டால், கடைசி படத்தை வைத்து எப்படி அவரை பீட் செய்வது என்றும் தான் செல்லும் போது தான் மட்டும் தான் டாப் வசூல் மன்னனாக இருக்க வேண்டும் என்கிற கணக்கை இப்போதே போட்டுப் பார்த்ததில் நடிகருக்கு தலையே சுற்றியதாக கூறுகின்றனர்.

சந்தோஷமும் வருத்தமும்: ஒரு பக்கம் உச்ச நடிகர் படம் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகி வருவதை பார்த்து ஒரு ஃபேன் பாயாக சந்தோஷம் இருந்தாலும், அந்த நடிகருக்குள் இருக்கும் போட்டி மனப்பான்மை இதை எப்படியாவது பீட் செய்ய வேண்டுமே என்கிற வருத்தத்தையும் அதிகளவில் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

வேவு பார்க்கும் ஆட்கள்: மாஸ் நடிகரின் ஆட்கள் தூணிலும் இருப்பர், துரும்பிலும் இருப்பர் என்பது போல டைரக்டர், தயாரிப்பாளர், மியூசிக் டைரக்டர் என அனைத்து இடங்களிலும் இருப்பதால் எல்லா தகவல்களும் நடிகருக்கு அப் டு டேட்டாக வந்துவிடுவதாக கூறுகின்றனர். அதிலும், உச்ச நடிகர் ஒதுக்கி வைத்த இயக்குநருடன் மீண்டும் டைரக்டர் சுற்ற ஆரம்பித்துள்ள நிலையில், அவர் மூலமாகவும் தகவல்கள் இந்த பக்கம் கசிந்து வருவதாக கூறுகின்றனர்.

கடைசி படம் முந்துமா?: உச்ச நடிகருடன் மட்டும் தான் தனக்குப் போட்டி என்பதை முழுமையாக நம்பி வரும் மாஸ் நடிகர் மற்ற போட்டி நடிகர்களை எல்லாம் பக்கத்தில் கூட வரவிடாமல் தனது இலக்கை எங்கேயோ கொண்டு சென்று வைத்திருக்கிறார். ஆனால், தனது கடைசி படம் உச்ச நடிகரின் படத்தின் வசூலை முந்துமா? என்கிற கவலையும், அதற்கு நம் தரப்பில் என்ன என்ன வேலைகளை சரியாக பார்க்க வேண்டும் என்கிற கணக்கை இப்போதே போட நடிகர் தொடங்கி விட்டார் என்றும் பொது வேலைகளை கூட சில நாட்கள் பெரிதாக கவனம் செலுத்தாமல் நடிகர் இருந்து வந்ததற்கு காரணமும் இந்த மேட்டர் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X