மாஸ் நடிகரும் அந்த பிரம்மாண்டமும் என் வாழ்க்கையில ஃபுட் பால் ஆடிட்டாங்க.. துண்டுடன் குமுறும் பிரபலம்
சென்னை: இனிமேல் கோலிவுட்டில் இருந்து யாரையும் நம்பி பணத்தை செலவழிக்க மாட்டேன் என்றும் செலவழிக்க பணமும் கைவசம் கிடையாது என தலையில் துண்டுடன் தயாரிப்பாளர் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சுற்றிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. டோலிவுட் நடிகர்களையும் இயக்குநர்களையும் நம்பியே படம் எடுத்திருந்தால் கூட இந்த நிலைமை அவருக்கு வந்திருக்காது என்கின்றனர்.
பேராசை யாரை விட்டது என்கிற பழமொழிக்கு ஏற்ப சில பக்கத்து ஸ்டேட் தயாரிப்பாளர்கள் இங்கே உள்ளவர்களின் மோசடி தெரியாமல் வலையில் வந்து எலியாக சிக்கிக் கொள்வதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

அந்த பிரபல தயாரிப்பாளர் தான் தற்போது பல கோடி நஷ்டமடைந்து தலையில் துண்டுடன் தவித்து வருவதாக பேச்சுக்கள் புகைய மாஸ் நடிகரை நம்பி படம் எடுத்து வரும் தயாரிப்பாளர் தாராளமாக பணத்தை செலவு செய்யலாமா? வேண்டாமா? என்கிற சிந்தனைக்கே வந்துவிட்டதாக கூறுகின்றனர்.
பல கோடி பாழாய் போச்சே: மாஸ் நடிகரை நம்பி பல கோடிகளை இழந்த அந்த தயாரிப்பாளர் பிரம்மாண்டத்தை நம்பி விட்ட காசை திரும்ப அள்ளிவிடலாம் என மேலும், பல நூறு கோடிகளை கொட்டிய நிலையில், பட்டை நாமத்தை போட்டு விட்டு சென்றுவிட்டாராம் அந்த பிரம்மாண்டம். கதை கூட என்னுடையது கிடையாது. பிரபல இயக்குநரின் கதை என ஓவர் பில்டப் விட்டு தனது பழைய படத்தையே எடுத்து வைத்து நம்பிய நடிகரையும் தயாரிப்பாளரையும் டோட்டலாக சோலியை முடித்துவிட்டார் என்கின்றனர்.
அடுத்த படம் 1000 கோடியா?: இத்துடன் இயக்குநர் பொட்டி படுக்கையை கட்டிக் கொண்டு ரிட்டயர் ஆகாமல் அடுத்த படத்தின் பட்ஜெட்டே 1000 கோடி செலவில் எடுத்து தன்னை நிரூபிக்கப் போவதாக சரியான தயாரிப்பாளரை வலை வீசி தேடி வருகிறாராம். டோலிவுட்டில் இருந்து அந்த தயாரிப்பாளரின் நிலைமை வெளியான நிலையில், கோலிவுட்டில் பலரும் சைலன்ட்டாக இருந்து எஸ்கேப் ஆகும் முடிவில் உள்ளனர் என்கின்றனர். பாலிவுட்டில் இருந்து யாராவது சிக்கினால் தான் உண்டு என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
மாஸ் நடிகர் படத்துக்கும் வேட்டு: ஒவ்வொரு படமும் கோடிக் கணக்கில் வெற்றி என கோல்மால் செய்து நம்பர் ஒன்னாக இருக்கும் மாஸ் நடிகரும் அந்த தயாரிப்பாளரை காலி செய்த நிலையில், அந்த விவரமும் தற்போது அவரது படத்தை தயாரித்து வரும் நிறுவனத்துக்கு தெரிய வந்திருப்பதாகவும் அதனால் தேவையற்ற பில்டப்புகள் மற்றும் செலவுகளை குறைத்து சிம்பதியிலேயே படத்தை ஓட்டி விட வேண்டும் என்று அந்த தயாரிப்பாளர் இப்பவே சுதாரித்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











