Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போட்ட திட்டமெல்லாம் பாழாய் போச்சு.. இயக்குநர் மீது செம டென்ஷனான மாஸ் நடிகர்.. அப்போ அது வராதா?
சென்னை: பாடல்கள் முதல் அனைத்து அப்டேட்களையும் நாம் தான் முதலில் கொடுக்க வேண்டும் என போட்டி காரணமாக ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருந்த மாஸ் நடிகருக்கு கடைசி நேரத்தில் இயக்குநர் செய்த சொதப்பல்களால் அவர் மீது செம டென்ஷனில் உள்ளாராம்.
தனது ரசிகர்களுக்காக புத்தாண்டுக்கு பெரிய ட்ரீட் கொடுக்க காத்திருந்த நிலையில், கடைசி வரை இன்னமும் படத்தின் பணிகள் முடிவு பெறாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்வதால் தான் மாஸ் நடிகர் அப்படி டென்ஷன் ஆகி விட்டாராம்.
டாப் நடிகரின் படத்தின் அதிரடியான அப்டேட் வெளியாகி சோஷியல் மீடியாவே டிரெண்டாகி வரும் நிலையில், நம்ம படத்தோட அப்டேட்டை முடியவில்லையே என வருத்தத்தில் மாஸ் நடிகர் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த
ஆண்டு
எனக்கு
2
ரிலீஸ்..
திடீரென
தேதியுடன்
அப்படியொரு
அறிவிப்பை
வெளியிட்ட
அட்லி..
செம!

புத்தாண்டு பிளான்
எப்பவுமே நாம தான் முதலில் இருக்க வேண்டும் என நினைக்கும் மாஸ் நடிகர் பிரம்மாண்டமாக படத்திற்கான ப்ரமோஷன் விழாவெல்லாம் நடத்தி முடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதே போல புத்தாண்டுக்கும் தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த அப்டேட்டை வெளியிட வேண்டும் என இயக்குநரிடம் சொல்லி இருந்தாராம்.

எல்லாம் முடிஞ்சிடும் பாஸ்
சமீபத்தில் நடைபெற்ற விழாவில் கூட மாஸ் நடிகர் கேட்டதற்கு பசங்க எல்லாம் தீயாய் வேலை செஞ்சிட்டு இருக்காங்க.. எல்லாமே பக்காவா முடிஞ்சிடும் பாஸ் என இயக்குநர் உறுதி அளித்திருக்கிறாராம். ஆனால், கடைசி நேரத்தில் இன்னமும் சில தினங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதை அறிந்து பதறிப்போன இயக்குநர் நடிகரிடம் இதைப்பற்றி எப்படி சொல்லப் போகிறோம் என பதறி போய் விட்டாராம்.

கடுப்பான ஹீரோ
எல்லாம் சரியா போயிட்டு இருக்கு கரெக்ட்டான நேரத்தில் வெளியாகும்னு சொன்னீங்க.. எங்கே என கேட்டு இயக்குநரிடம் செம கடுப்பை மாஸ் நடிகர் காட்டி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்னமும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியாதது மாஸ் நடிகரை மனதளவில் ரொம்பவே பாதிப்படைய செய்துள்ளதாம்.

லேட்டாகும்
இன்னைக்கு நாளைக்கு என ரசிகர்கள் ஒரு பக்கம் ஃபயர் விட்டுக் கொண்டிருக்க இப்போதைக்கு அந்த அப்டேட் வருவது கொஞ்சம் கால தாமதமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைந்து வேலைகளை முடித்து விட்டு சர்டிபிகேட் வாங்க நடிகர் தரப்பிலும் பெரிய அளவில் பிரஷர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

படமே ரிலீஸாகிடும் போல
எல்லா பணிகளும் அவசர அவசரமாக நடத்தப்பட்டால் சொதப்பல்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கு என்கிற அச்சமும் எழுந்துள்ளது. பொறுமையாக பார்த்து செய்தால் அதற்குள் படத்தை ரிலீஸ் பண்ண வேண்டிய தேதியே வந்துடும் போல அதற்குள் இயக்குநர் ப்ரொடக்ஷன் பணிகளை முடித்து விட்டு படத்தை வெளியிட்டு விடுவாரா என்கிற சந்தேகமும் படக்குழுவுக்கு எழுந்துள்ளது என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.