உச்ச நடிகரிடம் ஆதரவு கேட்ட மாஸ் நடிகர்.. துச்சமாய் டீல் செய்ததுக்கு சாரியும் கேட்டாராம்.. என்ன நடந்தது?

By Staff

சென்னை: சினிமாவில் இந்த நடிகர் அறிமுகமாகும்போது எல்லோரும் இவரை ஓட்டி எடுத்துவிட்டார்கள். இருப்பினும் மனம் தளராமல் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கினார். ஒருகட்டத்தில் உச்ச நடிகரையே ஓரங்கட்டும் அளவுக்கு வளர்ந்தார். மேலும் இரண்டு பேருக்கும் உரசலும் எழுந்தது. சூழல் இப்படி இருக்க மாஸ் நடிகர் தனது புதிய பயணத்தில் உங்களுடைய ஆதரவு வேண்டுமென்று உச்ச நடிகரை கேட்டுக்கொண்டாராம். இதுகுறித்து விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் வளர்ந்த ஹீரோக்களில் இவரும் ஒருவர். பக்கா மாஸ் என அவரது ரசிகர்கள் அவரை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒவ்வொரு படமும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவரது சம்பளமும் 150 கோடி ரூபாய்வரை நெருங்கிவிட்டதாகவும் முணுமுணுப்புகள் கேட்டன. இதையெல்லாம் வைத்து பார்த்த அவரது ரசிகர்கள்; இனிமேல் கோலிவுட்டி உச்ச நடிகர் என்றால் அது எங்கள் ஆள்தான் என்று வாள் சுழற்ற ஆரம்பித்தார்கள்.

Mass Actor Apologizes to Top Star for Support Shocking Phone Call Details Leak
Photo Credit:

களத்தில் குதித்த ஓஜிக்கள்: இதை பார்த்து காண்டான உச்ச நடிகரின் ரசிகர்கள்; ஓஜி தலைவர் என்றால் அது எங்கள் ஆள்தான் என்று மாஸ் நடிகரின் ரசிகர்களுக்கு எதிராக களம் கண்டார்கள். போதாக்குறைக்கு உச்ச நடிகர் சொன்ன ஒரு கதையும் ட்ரிகர் ஆக்கிவிட; இந்த மோதல் அடுத்தக்கட்டத்துக்கு வளர்ந்தது. எப்படியோ மாஸ் நடிகரின் ஸ்பீச் இந்த மோதலை கொஞ்சம் மட்டுப்படுத்தியது. இருப்பினும் தன்னை தாழ்த்தி கூறிய உச்ச நடிகர் மீது செம கோபாத்தில்தான் இருந்தாராம்.

Also Read
திரைமறைவில் நடிகரின் அரசியல் நடவடிக்கை.. உஷாராக ஏற்பாடு செய்தது கை கொடுக்குதாம்!
திரைமறைவில் நடிகரின் அரசியல் நடவடிக்கை.. உஷாராக ஏற்பாடு செய்தது கை கொடுக்குதாம்!

அதனால்தான் அந்த அமைதியா?: சூழல் இப்படி இருக்க புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் மாஸ் நடிகர். அதில் அவருடன் இருப்பவர்களில் ஒருவர் உச்ச நடிகரை தேவையில்லாமல் குறைத்து மதிப்பிட்டு பேசி சிக்கலில் சிக்கினார். எல்லோரும் அவரை கண்டித்த நிலையில்; மாஸ் நடிகர் மௌனமாகவே இருந்தார். இதற்கு முன்பு நடந்த சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டுதான் அவர் இப்படியெல்லாம் மௌனமாக இருக்கிறார் என்று ஏகப்பட்ட குரல்கள் கேட்டன. அவர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இறுதி வரை அமைதியாகவே அந்த விஷயத்தில் இருந்த அவர்; கண்டுகொள்ளவே இல்லை.

முளைத்த பிரச்னைகள்: இந்நிலையில் மாஸ் நடிகரை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் முளைத்துவிட்டன. இதன் காரணமாக புதிய பயணத்தில் இவருக்கு பேக் ஃபயர் ஆகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனால் அவர் கொஞ்சம் ஜெர்க் ஆகியிருக்கிறாராம். மோசமாக தோல்வியடைந்தால் நம்மை பேசி பேசியே கொன்றுவிடுவார்கள் என்பதால்; எப்படியாவது குறிப்பிட்ட தாக்கத்தை செலுத்திட வேண்டும் என்று முடிவெடுத்தாராம். அதன்படி எல்லோரிடமும் ஆதரவை கேட்கும் மனநிலைக்கு சென்ற அவர்; முதலில் பேசியது தோட்டத்து உச்ச நடிகரிடம்தானாம்.

மன்னிப்பு கேட்ட மாஸ் நடிகர்: தொலைபேசியில் தொடர்புகொண்டு எனக்கு உங்களது ஆதரவு வேண்டும். என்னுடன் இருப்பவர்கள் உங்களை அப்படி பேசியது தவறுதான். நானும் கடந்த காலங்களில் உங்களை துச்சமாக டீல் செய்திருக்கிறேன். அனைத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு இருந்தால் எனக்கு கொஞ்சம் பலமாக இருக்கும் என கேட்க; அதற்கு அந்த உச்ச நடிகரோ, உங்கள் பலம் என்னவென்று சொல்லி வாக்கு கேளுங்கள். என்னுடைய ஆதரவு எல்லாம் உங்களுக்கு கிடையாது என சூசகமாக சொல்லி ஃபோனை துண்டித்துவிட்டாராம். இதனால் மாஸ் நடிகர் மண்டையில் பெரிய பயம் வந்துவிட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X