எல்லாமே திருட்டு.. கடுப்பான மாஸ் ஹீரோ.. அவரை கழட்டிவிட காரணமே அந்த சமாச்சாரம் தானா?
சென்னை: மாஸ் ஹீரோவின் நேரத்தையும் பொறுமையையும் ரொம்பவே சோதித்த இயக்குநர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம். இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக வந்திருக்க வேண்டிய இடத்தில் இயக்குநரின் சொதப்பல் தான் தனக்கு கெட்டப் பெயர் கிடைக்க காரணம் என்பதை அறிந்த நடிகர் இயக்குநரை சந்திப்பதோ அவர் கால் பண்ணா எடுப்பது கூட கிடையாது என்கின்றனர்.
தன்னுடைய ஸ்டார்டம் காரணமாக மொக்கை விமர்சனம் வாங்கினாலும் படம் தப்பித்து விட்டது என்பதால் இயக்குநரை எல்லா விஷயங்களிலும் தள்ளி வைத்து வருகிறார் நடிகர் என்கின்றனர்.

மேலும், மாஸ் நடிகரின் போட்டி நடிகரை சந்தித்து விட்டு இயக்குநர் வந்தது கூட மாஸ் ஹீரோவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன.
எல்லாமே தயாரிப்பாளருக்காக: தன்னை நம்பி அதிக பொருட்செலவில் படம் எடுத்த தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்து விடக் கூடாது என நினைத்த மாஸ் ஹீரோவுக்கு அவர் நினைத்ததை போலவே வெற்றிக் கிடைத்த நிலையில், தயாரிப்பாளருக்காக சமீபத்தில் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகர் பங்கேற்றுள்ளாராம். மேலும், பெரிதாக எந்த விழாவும் வேண்டாம் என்றும் தான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றும் தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும் கூறி விட்டாராம் மாஸ் ஹீரோ.
இயக்குநர் மீது கோபம்: ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறேன் என பெரும் பில்டப் கொடுத்த அந்த இயக்குநர் பல நூறு கோடிகளை செலவு செய்து வெறும் ஹாலிவுட் படங்களின் காட்சிகளை திருடியே படம் எடுத்து அதையும் ஸ்பூஃப் செய்திருப்பதை அறிந்து நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். இயக்குநரிடம் இந்த காரணத்திற்காக நடிகர் பேசவே இல்லை என்றும் அவர் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் இயக்குநர் சரியாக நிறைவேற்றாத நிலையில், இந்த பஞ்சாயத்து வெடித்தது என்று கூறுகின்றனர்.
அவாய்ட் பண்ண நடிகர்: மேலும், டாப் நடிகரை அந்த இயக்குநர் சந்தித்தது மற்றும் தனது அடுத்த படத்திற்காக அந்த இளம் நடிகரை பயன்படுத்தியது என எதுவுமே நடிகருக்கு பெரிதாக பிடிக்கவில்லை என்கின்றனர். எப்படி இருந்தாலும், படத்தின் ரிசல்ட் பெருமளவில் அடிவாங்கிய நிலையில், இயக்குநரை சந்திக்க விரும்பவில்லை என அவாய்ட் பண்ணதால் தான் அந்த நிகழ்ச்சியில் அவரை காணவில்லை என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











