எல்லாமே வீணாப் போச்சே.. சிபாரிசு செய்த நடிகையையே கழட்டி விட்ட மாஸ் நடிகர்.. ஏன் தெரியுமா?
சென்னை: மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் எப்படியாவது ஜோடி சேர்ந்து விட வேண்டும் என திட்டம் போட்டு காய் நகர்த்திய விருது நடிகையின் முயற்சிகள் அனைத்தும் வீணாய் போயுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
ஏற்கனவே இரு முறை மாஸ் நடிகர் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய அவர் மீண்டும் அந்த நடிகருடன் ஜோடி சேர பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால், தொடர்ந்து அந்த நடிகை வேண்டாம் என மாஸ் நடிகர் ஒதுக்கி வருகிறாராம்.

செட்டாகவில்லை
விருது நடிகையுடன் மாஸ் நடிகர் ஜோடி போட்ட படங்களில் கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட செட்டாகவில்லை என அவர் காது படவே பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்த காரணத்தினால் அடுத்தடுத்த படங்களில் அந்த நடிகையை ஹீரோயினாக புக் செய்யாமல் தவிர்த்து வந்துள்ளார் மாஸ் நடிகர்.

நடிகையின் சிபாரிசு
ஆனால், மீண்டும் தனது இழந்த மார்க்கெட்டை கோலிவுட்டில் பிடிக்க அந்த மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தாக வேண்டும் என பெரு முயற்சி செய்து வந்த அந்த நடிகை பக்கத்து மாநிலத்தில் நடிகரை வரவழைத்து அங்கே ஜோடி சேரலாம் என திட்டமிட்டு சிபாரிசு செய்தார்.

பலிக்காத கனவு
நாமதான் ஜோடி என பெரும் நம்பிக்கையுடன் இருந்த அந்த நடிகையின் கனவு பலிக்காத நிலை உருவாகி விட்டதாக தற்போது தகவல்கள் கசிந்து வருகின்றன. நடிகை சிபாரிசு செய்திருந்தாலும் இந்த படத்தில் அவங்க வேண்டாம் என மாஸ் நடிகர் அதிரடியாக சொல்லி விட்டாராம்.

வேற ஹீரோயின்
இந்தியா முழுக்க தனது மார்க்கெட்டை உயர்த்தியாக வேண்டிய நிலையில், இருக்கும் அந்த மாஸ் நடிகர் விருது நடிகைக்கு பதிலாக பாலிவுட் நடிகையை படத்தில் புக் செய்தால் தான் அது சாத்தியமாகும் என்பதை உறுதியாக நம்பிய நிலையிலேயே இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. நடிகரின் முடிவை அந்த விருது நடிகையும் ஏற்றுக் கொண்டாராம்.

இன்னொரு ஹீரோவுடன்
மாஸ் நடிகரின் படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவான நிலையில், தான் அவசர அவசரமாக இன்னொரு இளம் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் அந்த விருது நடிகை. பெரும் தொகையுடன் படம் புக் ஆன நிலையில், மீண்டும் உற்சாக மன நிலைக்கு மாறி உள்ளாராம். அடுத்த படத்திலாவது மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு நடிப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
a


Click it and Unblock the Notifications











