அதள பாதாளத்திற்கு சென்ற வசூல்.. அவசர மீட்டிங் போட்ட நடிகர்.. தியேட்டர்கள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை?

By Staff

சென்னை: ஜாலியாக ஒரு படம் பண்ணியிருக்கிறோம் எப்படியாவது கமர்ஷியல் ஹிட் அடித்து விடும் என மாஸ் நடிகர் நினைத்த நிலையில், படத்திற்கு எதிராக கிளம்பிய நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக டிக்கெட் புக்கிங் அப்படியே ஸ்தம்பித்துப் போனது ஹீரோவை அதிர்ச்சியடைய செய்துள்ளதாம்.

தமிழ்நாட்டில் நம்ம படம் ஓடினாலே போதும் என நினைத்த நடிகருக்கு போட்டியாக வந்த பக்கத்து ஸ்டேட் படம் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்களும் திடீரென காட்சிகளை குறைத்து அந்த படத்துக்கு கொடுத்து வருவதால் அவசர மீட்டிங் ஒன்றை நடிகர் நடத்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

காமெடி படம்

காமெடி படம்

வழக்கம் போல தனக்கே உரிய பாணியில் காமெடி கலந்த கமர்ஷியல் படத்தை பண்ணி விட்டு எப்படியும் ஹிட் அடித்து விடும் என நடிகர் ரொம்பவே அசால்ட்டாக இருந்து விட்டாராம். ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் சிரிக்கவும் முடியாமல் போனதால் ரொம்பவே சீரியஸ் ஆகி விட்டதால் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வீழ்ச்சியை படம் சந்தித்து இருப்பது நடிகரை ரொம்பவே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.

தலைவலி

தலைவலி

கோலிவுட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்கிற நிலை மற்றும் தமிழ்நாட்டில் நம்ம படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. அதனால், எந்தவொரு பிரச்சனையும் வசூலில் இருக்காது என நினைத்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் அந்த படத்தின் அபரிமிதமான ஓப்பனிங்கால் இந்த படத்திற்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

பறிபோகும் தியேட்டர்கள்

பறிபோகும் தியேட்டர்கள்

ஆரம்பத்தில் மாஸ் நடிகரின் படத்திற்கு அதிக தியேட்டர்களும், பக்கத்து ஸ்டேட் நடிகர் படத்துக்கு குறைவான தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால், ரசிகர்கள் அதிருப்தியை தொடர்ந்து பல தியேட்டர்கள் அப்படியே பல்டி அடித்து மாஸ் நடிகரின் படத்தை தூக்கி விட்டு அதிக காட்சிகளில் அந்த படத்தை போட்டு வருகின்றனர்.

அவசர மீட்டிங்

அவசர மீட்டிங்

பெரிய வெற்றி இல்லை என்றாலும், ஓரளவு ஹிட் அடித்து படம் ஓடிவிடும் என நினைத்த நிலையில், இப்படியொரு மோசமான சரிவை படம் சந்தித்தது ஏன்? என்கிற கேள்வியுடன் அவசர மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளாராம் அந்த மாஸ் நடிகர். மேலும், அடுத்த படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தில் மிகுந்த கவனத்தையும் அக்கறையையும் செலுத்த தனது டீமுக்கு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இயக்குநர் மீது வருத்தம்

இயக்குநர் மீது வருத்தம்

எப்படியோ படம் நல்லா வந்துடும் என கடைசி வரை சொல்லி வந்த இயக்குநரின் பேச்சை நம்பிய நிலையில், படத்தின் ரிசல்ட் இப்படி வந்ததால் இயக்குநர் மீது ரொம்ப வருத்தத்தில் உள்ளாராம் மாஸ் நடிகர். இனிமேல், அந்த இயக்குநருடன் கை கோர்க்க வேண்டாம் என்கிற முடிவுக்கும் வந்து விட்டாராம்.

தயாரிப்பு தரப்பு செய்த தப்பு

தயாரிப்பு தரப்பு செய்த தப்பு

மற்ற மொழி படங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், மிகப்பெரிய புரமோஷன்களை செய்து படங்களை உலகளவில் கொண்டு சேர்த்து ஹிட் அடித்து விடுகின்றன. ஆனால், எந்தவொரு புரமோஷனையும் செய்யாமல் தயாரிப்பு தரப்பு பழி வாங்கியது தான் படத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அறிந்து கொண்ட நடிகர் இனிமேல் அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் பணியாற்ற போவதில்லை என்கிற முடிவுக்கும் வந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X