பெரும்புள்ளியின் பண சோர்ஸுக்கு ஆப்படிக்கும் மாஸ் நடிகர்.. குத்துதே குடையுதேன்னு கதறும் டீம்?
சென்னை: பெரும்புள்ளி தனக்கு செய்த அனைத்துக்கும் திருப்பிக் கொடுக்கும் நேரம் இது மாமே என மாஸ் நடிகர் சைலன்ட்டாக சில சம்பவங்களை செய்து வருகிறாராம். டைரக்ட்டாக கைது நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்ப்புகளை காட்டினால் சிக்கல் வரும் என்பதை நன்கு உணர்ந்துக் கொண்ட மாஸ் நடிகர் பணம் வரும் சோர்ஸ்களை முடக்கவும் அல்லது சேனல் மாற்றவும் முயற்சித்து வருகிறார் என்கின்றனர்.
மாஸ் நடிகர் அந்த இடத்தை பிடித்துவிட்டால் இனிமேல் நமக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என இன்னொரு பெரும் புள்ளி தெளிவாக எடுத்துச் சொல்லி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தனது பலத்தை நிரூபிக்க நினைத்த நிலையில், என் குடும்பத்தை தவிர எவனுக்குமே அந்த இடம் கிடையாது என்பதால் பெரும்புள்ளி அவரது ஐடியாவை மொத்தமாக வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

எப்படி இருந்தாலும் புது டீமுக்கு ஒன்றுமே புரியாது என்றும் சீக்கிரமே அவர்களை பக்காவாக சோலியை முடித்து விடலாம் என பெரும்புள்ளி போட்ட ஸ்கெட்ச் எல்லாம் இப்போ வீணாகி போனதால் தான் ஒரே புலம்பலாக உள்ளது என்கின்றனர்.
பண சோர்ஸுக்கு ஆப்பு: பல வருடங்களாக பெரும்புள்ளிக்கு வந்துக் கொண்டிருந்த பண சோர்ஸ்களை எப்படியெல்லாம் டார்கெட் செய்து காலி செய்வது என்கிற சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்துள்ளாராம் மாஸ் நடிகர் என தகவல்கள் கசிந்துள்ளன. நேரடியாக அட்டாக் செய்தால் கண்டிப்பாக பல சிக்கல்கள் வரும் என்பதை புரிந்துக் கொண்ட நடிகர், அந்த பெரும்புள்ளியை வீக் ஆக்க என்னவெல்லாம் செய்யலாம் என்றும் அவரது பண சோர்ஸை முடக்கிவிட்டால் தானாகவே தான் நினைத்ததை மொத்தமாக நிறைவேற்றலாம் என இறங்கி ஆடி வருகிறார் என்கின்றனர்.
குத்துதே குடையுதே: ஆரம்பத்திலேயே அவனை எல்லாம் சும்மா விட்டா நமக்குத்தான் ஆப்பு என பெரும்புள்ளியிடம் நெருக்கமானவர்கள் முதல் எதிர் டீம் அணியினர் வரை அட்வைஸ் செய்தும் அதையெல்லாம் நான் லெஃப்ட் ஹேண்டில் ஃபினிஷ் செய்துவிடுவேன் என ஜம்பம் செய்து வந்த பெரும்புள்ளி கடைசியில் க்ளீன் போல்டு ஆனது தான் நடிகரின் செக்மேட் என்கின்றனர். கூட இருக்கும் ஒவ்வொரு குதிரை, மந்திரி, தூண் என மொத்தத்தையும் மாஸ் நடிகர் தூக்கிக் கொண்டு போக காரணமே அதுதான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications