இது ஓரவஞ்சனை.. ஒரு மாஸ் நடிகரை மட்டும் ஓரங்கட்டிய விருது விழா.. செம்ம கடுப்பில் ரசிகர்கள்!
சென்னை: சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சினிமா விருது விழா நிகழ்ச்சியில் ஒரு மாஸ் நடிகரின் படங்களுக்கு மட்டும் அதிகளவில் விருதுகளை வாரிக் குவித்து, இன்னொரு மாஸ் நடிகரை கண்டுக் கொள்ளாமல் ஓரங்கட்டியுள்ளனர்.
இந்த நிகழ்வு அந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள் மத்தியில் செம்ம கடுப்பை உண்டாக்கியுள்ளது. விருது விழா குறித்து சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர் ரசிகர்கள்.
இது எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணம் என்ற பேச்சும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தூக்கி வைத்து கொண்டாட்டம்
அந்த ஒரு மாஸ் நடிகரின் படத்திற்கும், அந்த மாஸ் நடிகருக்கும் ஏகப்பட்ட விருதுகளை சமீபத்தில் நடைபெற்ற அந்த பிரம்மாண்ட விருது விழா வழங்கியது. இதனால் இன்னொரு மாஸ் நடிகரின் ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் இருக்கின்றனர்.

சும்மா விடவில்லை
மேலும், அந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள் சும்மா இருக்காமல், விருது பெறாத அந்த மாஸ் நடிகர் படத்தை பற்றியும் அதன் இயக்குநர் பற்றியும் மிக மோசமாக சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஓரவஞ்சனை
இப்படி ஒரு மாஸ் நடிகர் படத்தை தூக்கி வைத்து கொண்டாடி மற்றொரு மாஸ் நடிகர் படத்திற்கு எந்தவித விருதுகளும் கொடுக்காமல் ஓரவஞ்சனை செய்து விட்டதாக அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை பற்றி சமூக வலைதளங்களில் இந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள் கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

சும்மாவே சண்டை போடுவோம்
ஒரு போஸ்டர் ரிலீஸ், ஒரு அப்டேட் என எதுக்கெடுத்தாலும் இரு ரசிகர்களும் சும்மாவே சண்டை போடுவார்கள். இவர்களுக்கு இப்படியொரு மேட்டர் கிடைக்க சமூக வலைதளங்கள் திணறும் அளவுக்கு கீழ்த்தரமான மீம்களை போட்டு இரு ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர்.

காரணம் என்ன தெரியுமா?
அந்த விருது விழாவை நடத்தும் நிறுவனம் அந்த மாஸ் நடிகரின் தீவிர ரசிகர் என்றும் அதனால் தான் சும்மாவே அத்தனை விருதுகளையும் அந்த நடிகருக்கே தூக்கிக் கொடுத்துள்ளனர் என இந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் புது வெடிகுண்டை பற்ற வைத்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் பவர்
அந்த மாஸ் நடிகரை படங்களை தயாரித்து வரும் அந்த தயாரிப்பாளருக்கு இருக்கும் செல்வாக்கும் காரணமாக இருக்கலாம் என சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











