அய்யோ அந்த ஹீரோயினா.. வேண்டாவே வேண்டாம்.. மாஸ் நடிகரிடம் மன்றாடும் ரசிகர்கள்.. அதுதான் மேட்டராம்!
சென்னை: தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் அடுத்ததாக மாஸ் நடிகர் நடிக்க உள்ள படத்தில் அவார்டு நடிகையை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே ஒரு சில படங்களில் மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு அந்த ஹீரோயின் நடித்த நிலையில், மீண்டும் ஜோடி சேரும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனால், மாஸ் நடிகரின் தீவிர ஃபேன்ஸோ, அய்யோ அந்த ஹீரோயினா.. வேண்டவே வேண்டாம் என சமூக வலைதளங்களில் மன்றாடி வருகின்றனர்.

தெலுங்கு இயக்குநர்
தமிழில் அந்த பிரம்மாண்டத்துடன் மாஸ் நடிகர் இணைவார் என எதிர்பார்த்த நிலையில், அந்த பிரம்மாண்டம் தெலுங்கு நடிகரை தேடிச் சென்று விட்டது. இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் அடுத்த படத்தில் மாஸ் நடிகர் நடிக்கப் போவது 100 சதவீதம் கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

அவார்டு நடிகை
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த அந்த இளம் நடிகை அவார்டு படத்தில் நடித்து ஓவர் நைட்டில் உலக பிரபலம் ஆகி விட்டார். ஆனால், அதற்கு பிறகு அவரது உடல் தோற்றத்தை மொத்தமாக குறைந்து ஏலியன் போல மாறிய நிலையில் பெரிய பெரிய பட வாய்ப்புகள் எல்லாம் கை நழுவிப் போனது.

பெருசா செட் ஆகவில்லை
ஏற்கனவே இரண்டு படங்களில் அந்த மாஸ் நடிகருடன் அவார்டு நடிகை ஜோடி போட்டு நடித்துள்ளார். இரண்டு படத்திலுமே ஜோடி பொருத்தம் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்றும், மாஸ் நடிகருக்கு ஏற்ற ஜோடி இவர் இல்லை என்றும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

வேண்டவே வேண்டாம்
இந்த வயதிலும் அந்த மாஸ் நடிகர் செம ஃபிட்டாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கும் நிலையில், மீண்டும் அவருக்கு ஜோடியாக இவரை போட்டால் செட்டே ஆகாது என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர். அதனால், அந்த நடிகை வேண்டவே வேண்டாம் என்கிற கோரிக்கைகளை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் நேரடியாகவே அந்த இயக்குநருக்கும் நடிகருக்குமே டேக் செய்து ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சும்மா விட மாட்டார்
பழைய மார்க்கெட்டை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என நினைத்து அடுத்தடுத்த பெரிய படங்களை பிடித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அந்த அவார்டு நடிகைக்கு மீண்டும் மாஸ் நடிகருடன் நடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. அதனால், இந்த வாய்ப்பை எந்த காரணம் கொண்டும் மிஸ் ஆக அவர் விடவே மாட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











