இளம் மாஸ் நடிகரின் அசுர வளர்ச்சி.. மாஸ் நடிகர் ரசிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்குதாம்!
சென்னை: கோலிவுட்டுக்கு அடுத்த புதிய பாக்ஸ் ஆபிஸ் நடிகர் உதயமாகி வருவது மாஸ் நடிகர் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம்.
வளர்ந்து வரும் நடிகரின் வளர்ச்சியைத் தடுக்க சமூக வலைதளங்களில் எந்தளவுக்கு நெகட்டிவிட்டியை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பரப்ப மாஸ் நடிகரின் மேல் வட்டத்தில் இருக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகளே களத்தில் இறங்கி செயல்பட்டு வருவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் ரசிகர்கள் அவருக்கான ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஓட வச்சதே இவங்க தானா
இளம் மாஸ் நடிகருக்கு அத்தனை பெரிய வசூலை கொடுத்த அந்த படத்தை ஓட வைத்ததே மாஸ் நடிகரின் படத்தை அந்த இயக்குநர் அடுத்ததாக எடுக்கப் போகிறார் என்கிற ஒரே காரணத்துக்குத்தான் என இவர்களே தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால், அப்படி இருக்க மாஸ் நடிகர் படம் மட்டும் ஏன் படுத்து விட்டது என்கிற கேள்வியை டாப் நடிகரின் ரசிகர்கள் தற்போது கிளப்பி வருகின்றனர்.

மற்ற நடிகர்களின் ரெஃபரன்ஸ்
மாஸ் நடிகரின் ரெஃபரன்ஸை விடுத்து உச்ச நட்சத்திரம் மற்றும் டாப் நடிகரின் ரெஃபரன்ஸ்களை தொடர்ந்து அந்த இளம் மாஸ் நடிகர் வைத்து வருவது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கின்றனர். இளம் மாஸ் நடிகரும் உச்ச நட்சத்திரத்தை மட்டுமே ஹைலைட் செய்து இந்த இரு நடிகர்களுக்கும் போட்டியாக மாறி வருகிறார்.

அந்த இடத்தை பிடித்து விடுவாரோ
உச்ச நட்சத்திரத்தின் இடத்தை மாஸ் நடிகர் பிடித்து விட்டார் என மார் தட்டி வரும் நிலையில், அவரது இடத்தை அடுத்ததாக இளம் மாஸ் நடிகர் பிடித்து விடுவாரோ என்கிற பீதி தற்போது மாஸ் நடிகர்கள் மத்தியில் பீடித்துக் கொண்டிருப்பது தான் இந்த சர்ச்சைக்கே காரணம் என்கின்றனர்.

நெகட்டிவிட்டியை தள்ளி வைக்கல
நெகட்டிவிட்டியை தள்ளி வைக்காமல் அந்த இளம் நடிகர் மீது அப்படியொரு வெறுப்பை அவர்கள் கொட்டித் தீர்கத் தொடங்கி உள்ளனர். நடிகரின் வளர்ச்சி மற்றும் அவர் போகும் ரூட் கொஞ்சம் கூட மாஸ் நடிகரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். உச்ச நட்சத்திரத்தின் இடத்தை எப்படி மாஸ் நடிகரால் பிடிக்க முடியாதோ அதே போல மாஸ் நடிகரின் இடத்தை இளம் மாஸ் நடிகராலும் பிடிக்க முடியாது என்பதை ரசிகர்கள் முதலில் உணர வேண்டும். ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கான இடத்தில் ஸ்ட்ராங்காக உள்ளனர். அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டாலே சிறப்பான விஷயம். வசூல் ரீதியாக ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் புதிய நடிகர்கள் மாறுவார்களே தவிர, மூத்த நடிகர்களின் புகழ் என்றுமே குறையாது.


Click it and Unblock the Notifications











