நம்பர் ஒன் இடத்துக்கு குறி வைத்த இரு பெரும் தலைகள்.. உச்சகட்ட பயத்தில் மாஸ் நடிகர்.. என்ன ஆகுமோ?

By Staff

சென்னை: அவங்க ஆட்டம் எல்லாம் ஓவர், இனிமேல் நாம் தான் ராஜா என நினைத்துக் கொண்டிருந்த மாஸ் நடிகருக்கு திடீரென இரு பெரும் நடிகர்கள் செம செக்மேட் வைத்துள்ளது கோடம்பாக்கத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

டாப் நடிகர் எல்லாம் தனக்கு போட்டியே இல்லை, நாம் தான் நம்பர் ஒன் என நினைத்து வந்த மாஸ் நடிகருக்கே கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் பயத்தை பாஸ் நடிகர் காட்டி விட்டார்.

உடனடியாக தானும் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க நினைத்து முயற்சி செய்து வரும் மாஸ் நடிகருக்கு இந்த ஆண்டு உச்ச நட்சத்திரமும் போட்டிக்கு நானும் வரேன் கண்ணா என களமிறங்க நடிகருக்கு ரொம்பவே பயம் பற்றிக் கொண்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

போட்டி இல்லை என்கிற மிதப்பில்

போட்டி இல்லை என்கிற மிதப்பில்

தற்போது இருக்கும் சூழலில் தான் தான் பாக்ஸ் ஆபிஸ் ராஜா என்றும் தனக்கு யாரும் சரி நிகர் போட்டியில்லை என கடந்த சில ஆண்டுகளாக கவலையின்றி வாழ்ந்து வந்த அந்த மாஸ் நடிகருக்கு கடந்த ஆண்டு முதல் பெரும் கவலை பற்றிக் கொண்டது என பேச்சுக்கள் கசிந்துள்ளன. அதற்கு காரணம் சக நடிகரான டாப் நடிகர் இல்லை என்றும் இரு சீனியர் நடிகர்கள் தான் எனக் கூறுகின்றனர்.

இண்டஸ்ட்ரி ஹிட்டால் வந்த பயம்

இண்டஸ்ட்ரி ஹிட்டால் வந்த பயம்

பாக்ஸ் ஆபிஸில் நடிகரின் படங்கள் அதிக வசூலை ஈட்டி சினிமாவுக்கு மிகப்பெரிய வரமாக இருந்து வந்த நிலையில், நம்மை தாண்டி மற்ற நடிகர்களின் படங்கள் செல்லாது என்கிற மிதப்பிலேயே நடிகர் இருந்து வந்தார் என்றும் கடந்த ஆண்டு அடுத்தடுத்து இரு பெரிய படங்கள் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து நடிகருக்கு சிம்ம சொப்பனமாக மாறியது என்றும் பேச்சுக்கள் புயலாக கிளம்பி உள்ளன.

பெரிய தலைகள்

பெரிய தலைகள்

இந்த ஆண்டு எப்படியாவது நாமும் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தாக வேண்டும் என அந்த டேலன்ட்டான இயக்குநர் படத்தில் மாஸ் நடிகர் கடுமையாக நடித்து வரும் நிலையில், அவருக்கு போட்டியாக இரு பெரும் தலைகள் இந்த ஆண்டும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் முயற்சியில் போட்டி போட்டு வேலை பார்த்து வரும் தகவல் நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது என்கின்றனர்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

இயக்குநரின் அந்த மாய உலகில் ஆட்கொள்ளாமல் தனக்கான ஒரு உலகத்தை க்ரியேட் செய்து நடிகர் நடித்து வரும் நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் நடத்துமா? என்கிற பெரிய கேள்விக்குறியும் எழுந்துள்ளது. மேலும், நடிகரின் படம் வெளியாகும் அதே நாளில் போட்டியாக படங்களை இறக்கவும் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் முடிவு கட்டி உள்ள நிலையில், இந்த முறையும் நடிகர் மூலமாக இண்டஸ்ட்ரி ஹிட் வருவது என்பது ரொம்பவே கஷ்டம் என்கின்றனர்.

அந்த இடம் போச்சே

அந்த இடம் போச்சே

பெரிய அளவில் நடிப்பால் ரசிகர்களை கவரவில்லை என்றாலும், கமர்ஷியல் வெற்றி மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் அந்த மாஸ் நடிகருக்கு பெரும் போட்டியாக பல படங்கள் அவரது படங்களை விட அதிக வசூலை குவித்து வரும் நிலையில், அந்த நம்பர் ஒன் இடமும் போச்சே என வருத்தத்தில் உள்ளாராம்.

பிரைட் நடிகர் படமும்

பிரைட் நடிகர் படமும்

இந்த ஆண்டு மாஸ் நடிகருக்கு செக்மேட் வைக்க இரு பெரும் தலைகளின் படங்கள் மற்றும் டாப் நடிகரின் படங்கள் மட்டுமின்றி அந்த பிரைட் நடிகரின் பிரம்மாண்ட படமும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அனைத்து படங்களை விட அதிக வசூல் ஈட்டி எப்படி தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்கிற பயத்தில் அதற்கான ஆலோசனைகளில் நடிகர் ஈடுபட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X