இங்கே அடி விழுந்தா அங்கே வலிக்குமே.. தமாஸ் நடிகருக்கு எதிராக மாஸ் நடிகர் கொடுத்த சிக்னல்?

By Staff

சென்னை: மாஸ் நடிகருக்கு எதிராக தமாஸ் நடிகர் அந்த பெரும்புள்ளியுடன் இணைந்து வேலை பார்த்தது நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது என்று கூறுகின்றனர். இந்நிலையில், தமாஸ் நடிகருக்கு எதிராக தனது படையை திரட்டவும் சிக்னல் கொடுத்து விட்டார் என்றும் அதற்கான வேலைகள் தான் தீயாக நடைபெற்று வருகிறது என்கின்றனர்.

வளரும் நடிகருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த நிலையில், தனக்கு சப்போர்ட்டாக இருப்பார் என எதிர்பார்த்த மாஸ் நடிகருக்கு அல்வா கொடுக்கும் விதமாக பெரிய இடமாக சென்று கைகுலுக்கிய நடிகரின் செயலால் மாஸ் நடிகர் காண்டாகி விட்டார்.

Mass Actor gives green signal to put a checkmate to Popular Hero
Photo Credit:

பாஸ் நடிகரும் மாஸ் நடிகருக்கு எதிராக ரூட்டை மாற்றி நிற்கும் நிலையில், இருவருக்கும் சேர்த்து வேட்டு வைக்க வேண்டும் என்கிற முடிவில் நடிகர் உறுதியாக இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

போட்டா போட்டி: தமிழ் சினிமாவே போட்டா போட்டியில் தான் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக் கொண்டிருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் சீக்கிரமே பல தியேட்டர்களே இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் கோலிவுட்டில் இருக்கும் ஒரு சில தயாரிப்பாளர்களும் ஷட்டரை இழுத்து சாத்த வேண்டிய நிலை வரும் என்கின்றனர்.

தேவையில்லாத ரூட்டு: மாஸ் நடிகருக்கு எதிராக தமாஸ் நடிகர் எடுத்த தேவையில்லாத ரூட் காரணமாக அவருக்கு தொடர்ந்து ஏழரை கிளம்பி வருகிறது என்றும் சரிவு நிலையை நோக்கி தமாஸ் நடிகர் செல்ல காரணமே அவரது இக்கரைக்கு அக்கரை பச்சை புத்தி தான் என்றும் கூறுகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே பலரை ஏமாற்றியே தனது வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளார் என்றும் மாஸ் நடிகரின் வட்டாரங்கள் நடிகரை பற்றி பேச ஆரம்பித்துள்ள நிலையில், பல டாப் இயக்குநர்களும் நடிகரை இயக்க ஆர்வம் காட்டாமல் பக்கத்து ஸ்டேட் நடிகர்களை தேடி செல்கின்றனர் என்கின்றனர்.

இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்: இந்த முறை தமாஸ் நடிகருக்கு சரியான அடி கொடுக்க வேண்டும் என்பதில் மாஸ் நடிகர் உறுதியாக உள்ளார் என்கின்றனர். மேலும், இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் என்கிற ரீதியில் இந்த படம் ஓடவில்லை என்றால் நடிகர் நடித்து வரும் படத்துக்கும் ஹைப் குறைந்து ஆப்பாக மாறிவிடும் என்கின்றனர். தொழில் போட்டி இருக்கலாம் என்றும் ஆனால், யாரையும் வீழ்த்த நினைக்கக் கூடாது என கோடம்பாக்கம் டீக்கடை பெஞ்சில் பெரியவர் ஒருவர் அட்வைஸ் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X