ரீலில் ஒண்ணு ரியலில் ஒண்ணு.. இதுதான் உச்சநடிகரின் டபுள் ஸ்டாண்டர்ட் மனநிலை!
சென்னை: துப்பாக்கி எடுத்து புல்லட் கணக்கின்றி எதிரிகளை சுட்டுத் தள்ளுவதும், கத்தியை எடுத்து குத்திக் கிழிப்பதுமாக பல படங்களில் வன்முறைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு, தற்போது அஹிம்சை வழியாக செல்ல வேண்டும் என ரியலில் சொல்வது அந்த உச்சநடிகரின் டபுள் ஸ்டாண்டர்ட் மனநிலையை காட்டுவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.
உச்சநடிகரின் படங்கள் ரிலீசாகும் போது வீர வசனங்கள் பேசுவதும், பின்னர் மெளன சாமி ஆகிடுவதுமாக பல காலம் தனது காலத்தை தள்ளி வருகிறாராம் அந்த மாஸ் நடிகர்.

சாயம் பூசவே தேவையில்லை
தனக்கு அந்த சாயம் பூச முடியாது என்று சமீபத்தில் கெத்தாக பஞ்ச் வசனம் பேசிய அந்த உச்ச நடிகர், தொடர்ந்து அந்த கட்சிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். இதற்கு மேலும், அவருக்கு சாயம் எல்லாம் பூச வேண்டாம். அவர் அவங்க ஆளுதான் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

கொச்சைப் படுத்துதல்
உரிமைக்காக போராட வேண்டும் என இவரே இவரது படங்களில் பல முறை கூறிவிட்டு, இப்போது, போராட்டம் அர்த்தமற்றது இளைஞர்கள் அதை கை விட வேண்டும் என்று கூறுவது, அவர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதற்கு சமம் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.

நல்ல கலெக்ஷன்
சினிமாவில் அதிரடி காட்சிகளில் எதிரிகளை துவம்சம் செய்து, எக்கச்சக்க வன்முறைகளை நிகழ்த்தி மக்களின் ஹீரோ என்ற பெயரை வாங்கிக் கொண்டு நல்லா கல்லா கட்டுகிறார். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர் எதிராக அவரது கருத்துக்கள் இருக்கின்றன என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

சாயும் சோபா
எந்த பக்கமும் சாய மாட்டேன் என்று வெறும் வாயால் பேசிவிட்டு, ஒரே சைடாக சாயும் சோபாவாக அந்த உச்ச நடிகர் இருக்கிறார் என்ற கடும் விமர்சனங்களும் அவர் மீது எழுந்துள்ளன. இதற்கெல்லாம் சரிகட்டிவிட்டு, தனது அரசாங்கத்தை எப்படி அமைக்கப் போகிறாரோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











