முந்தைய சம்பவம் மாதிரியே ஆயிடுமோ.. அச்சத்தில் மாஸ் நடிகர்!
சென்னை : மாஸ் மற்றும் டாப் நடிகர்கள் இருவரின் படங்களும் பொங்கலையொட்டி மோதவுள்ளது.
தனித்தனியாக வெளியானாலே இருதரப்பு ரசிகர்களும் மாற்றி மாற்றி மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக நடைபெறும்.
இந்நிலையில் தற்போது இந்த இரு படங்களும் மோதுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமோ என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் மோதும் ரசிகர்கள்
மாஸ் மற்றும் டாப் நடிகர்களின் படங்கள் கடந்த சில வருடங்களாக தனித்தனியாகவே வெளியாகி வந்தன. இந்தப் படங்கள் தனித்தனியாக வெளியாகும் நிலையில், படத்தின் நிறைகுறைகளை குறிப்பாக குறைகளை மற்ற தரப்பு தனியாக ஹைலைட் செய்யும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக நடைபெற்று வந்தது.

பெஸ்ட்டை காட்ட இப்படியா?
இந்நிலையில் தன்னுடைய பெஸ்டை நிரூபிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை கடந்த சில வருடங்களாகவே டாப் நடிகர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதிதான் தற்போது மாஸ் நடிகருடன் தன்னுடைய படத்தை மோதவிட்டுள்ளார். தீபாவளிக்கே இவரது படம் வெளியாகவிருந்த நிலையில், இதற்காகவே தன்னுடைய படத்தின் சூட்டிங்கை இவர் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இயக்குநர் தீவிரம்
மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரு படங்கள் சிறப்பாக அமையாத நிலையில், இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கும் தீவிரத்தில் இயக்குநர் சிறப்பான திரைக்கதையுடன் இந்தப் படத்தை அணுகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்ட செட்களுடன் இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர்.

திருப்தியடையாத மாஸ் நடிகர்
இதனிடையே மாஸ் நடிகரின் படமும் முழுமையாக உருவான நிலையில், படத்தை பார்த்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழு இதன் அவுட்கம்மால் திருப்தி அடையவில்லையாம். படத்தை பார்த்த மாஸ் நடிகரும் இதே மனநிலையில்தான் இருக்கிறாராம். மாஸ் நடிகரின் பிரம்மாண்டமான படத்துடன் மோதவுள்ள நிலையில் எந்த மாதிரியான முடிவை எடுப்பது என்று குழம்பி போயிருக்கிறாராம்.

மீண்டும் மொக்கை?
கடந்த படத்திலேயே பிரபல கன்னட படத்துடன் மோதி மொக்கை வாங்கியது மாஸ் நடிகரின் படம். தற்போது டாப் நடிகருடன் மோதவுள்ள நிலையில், இதிலிருந்து பின் வாங்கவும் முடியாமல் தவித்துப் போயிருக்கிறாராம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்களும் மோதவுள்ளதால் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











