For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏண்டா அந்த நடிகையை புக் பண்ணோம் என தலையை பிய்த்துக் கொள்ளும் படக்குழு.. ரொம்ப ஓவரா பண்றாராம்!

  By Staff
  |

  சென்னை: மாஸ் நடிகரின் படத்தில் இணைந்த கால் நடிகையின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாக படக்குழுவினர் புலம்பி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  பார்ட்டிக்கு செல்வது, சோஷியல் மீடியாவே கதியென கிடப்பது என ஏற்கனவே நிறைய அக்கப் போர் செய்து வரும் அந்த நடிகை தற்போது இன்னொரு அதகளத்தையும் செய்து வருவது படக்குழுவுக்கு புதிய தலைவலியை உண்டாக்கி உள்ளதாம்.

  நடிகையின் மார்க்கெட் படத்துக்கு முக்கியம் என்பதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர் செய்யும் அட்ராசிட்டிகளை சகித்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

  தடுப்பூசி போட்டாச்சு... நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது தடுப்பூசி போட்டாச்சு... நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

  சொதப்பல்

  சொதப்பல்

  மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்த அந்த கால் அழகிக்கு கோலிவுட்டில் தான் முதன் முதலில் பட வாய்ப்பு கிடைத்தது. கொரிய படங்களை சுட்டு இயக்கும் அந்த கண்ணாடி போட்ட இயக்குநர் இயக்கத்தில் வெளியான அந்த ஹாலிவுட் காப்பி படம் அட்டு ஃபிளாப் ஆக அம்மணிக்கு இங்கே அடுத்த பட வாய்ப்புகள் அமையவில்லை.

  தஞ்சம்

  தஞ்சம்

  கோலிவுட் கோபேக் போர்டை தூக்கிப் பிடிக்க பக்கத்து மாநிலத்தில் சில பல படங்களில் நடித்து வந்த அந்த நடிகைக்கு சமீபத்தில் தான் பெரிய ஹிட் கிடைத்தது. வெற்றி வாகை சூடிய நிலையில் சட்டுபுட்டுன்னு மீண்டும் முன்னணி நடிகர்கள் படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டார்.

  அங்கேயும் எடுபடல

  அங்கேயும் எடுபடல

  பாலிவுட் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் மும்பைக்கு பறந்து சென்ற அந்த நடிகைக்கு அத்தனை பெரிய நடிகரின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பும் பலன் கொடுக்கவில்லை. பெரிய பட்ஜெட்டில் உருவான அந்த படமும் படு தோல்வியை சந்திக்க மீண்டும் தஞ்சம் புகுந்த இடத்திற்கே வந்து விட்டார் கால் நடிகை.

  மவுசு கூடியது

  மவுசு கூடியது

  ஆனால், தற்போது அந்த நடிகையின் நிலைமையே வேறு, பல ஆண்டுகளாக பெரிய நடிகையாக வளர முடியவில்லையே என ஃபீல் பண்ணி வந்த அவரை தேடி இன்று ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். அதிர்ஷ்டம் இல்லை என ஒதுக்கிய கோலிவுட்டும் இன்று சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்து வருகிறது.

  தலை கால் புரியவில்லை

  தலை கால் புரியவில்லை

  புகழின் வெளிச்சம் உச்சத்தை தொட்டதும் அந்த நடிகைக்கு தலை கால் புரியவில்லை என்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் அதிக கவனத்தை செலுத்தாமல் போட்டோஷூட்களை நடத்துவதும், சோஷியல் மீடியாவிலேயே மூழ்கி இருப்பதுமாக கால்ஷீட்டை கரைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

  வீக்கெண்ட் பார்ட்டி

  வீக்கெண்ட் பார்ட்டி

  இது போதாது என வீக்கெண்ட் ஆனால் கிழக்கு கடற்கரை சாலைக்கு காரை விட்டு விடுகிறாராம். அங்கே ஏகப்பட்ட பார்ட்டிகளில் கலந்து கொண்டு புதிய பட வாய்ப்புகளையும் அவர்கள் கொடுக்கும் அட்வான்ஸ்களையும் அள்ளிப் போட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

  அதிக செக்யூரிட்டி

  அதிக செக்யூரிட்டி

  இந்த பிரச்சனையை எல்லாம் சகித்துக் கொண்டு மாஸ் நடிகரின் படக்குழு அவரை வைத்து படம் எடுத்து வரும் நிலையில், அடுத்த பிரச்சனையாக ஏகப்பட்ட பாடிகார்டை எப்போதுமே தன்னைச் சுற்றி வைத்துக் கொள்கிறாராம். இவர் போட்டுள்ள டைட் செக்யூரிட்டிக்கும் சேர்த்து படக்குழு சம்பளம் மற்றும் சாப்பாடு கொடுத்து வருவது கூடுதல் செலவை இழுத்து விட்டுள்ளதாக படக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.

  மற்ற நடிகைகள்

  மற்ற நடிகைகள்

  இதற்கு முன் மாஸ் நடிகருடன் இணைந்து நடித்த எந்த நடிகையும் இந்த அளவுக்கு பந்தா பண்ணி வீண் செலவுகளை இழுத்து விட வில்லை என்றும் ஆனால், இவர் ரொம்ப ஓவராக பண்ணுகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது. ஆனால், நடிகைக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக அத்தனையும் பொறுத்துக் கொள்ளத்தானே வேண்டும்.

  English summary
  Mass actor movie crew upset over lead actress atrocities in shooting spot also she do more expenses to the crew buzz circulates in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X