முதலை வாயில் தலை கொடுத்த மாஸ் நடிகர்.. அத்தனை கோடிக்கும் ஆப்பு.. சோலி முடிஞ்சு?
சென்னை: எல்லாத்துக்கும் ரெடியாகி விட்டேன் என நடிகர் அறிவித்ததும் வடிவேலுவுக்கு கன்னா பின்னாவென கட்டையால் அடி விழுவது போலவும் கத்திகள் பாய்வது போலவும் மாஸ் நடிகரின் சோலியை முடித்துக் கட்ட கங்கணம் கட்டி அவரது எதிர்பாளர்கள் அடித்து விளையாட ஆரம்பித்து விட்டனர்.
நமக்கு ஒருத்தன் சிக்கிட்டான் டா என போன் போட்டு வண்டி நிறைய ஆட்களை ஏற்றிக் கொண்டும் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன் டா என போட்டு பொளந்து வருகின்றனர்.

ஆரம்பத்திலேயே தயாரிப்பு நிறுவனத்திடம் மண்டியிட்டால் மரண அடி உறுதி என மாஸ் நடிகர் எச்சரித்தும் சண்டை சச்சரவு வேண்டாம் வெள்ளைக் கொடியை உயர்த்தலாம் என நினைத்து முதலை வாயில் தலையை கொடுத்து விட்டனர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நம்பி வாங்க நாங்க இருக்கோம்: பெரிய பஞ்சாயத்தைக் கூட்டும் படம் தியேட்டரில் வந்த பிறகும் ஒரு மாதத்துக்குள் ஓடிடியில் வந்த பிறகும் கூட மருந்துக்கு கூட ஒரு பிரச்னை கூட வெடிக்கவில்லை. நம்பர் நடிகையின் படத்தை எல்லாம் வேண்டுமென்றே மத பிரச்னையை உருவாக்கி காலி செய்தனர். ஆனால், எதிர்க்கட்சிக்கு எதிரான படம் என்பதால் அந்த படத்துக்கு ஆதரவு கொடுத்து விட்டு, இந்த படத்திற்கு வச்சு செய்ய காரணமே மாஸ் நடிகர் தங்கள் வசம் அடி பணியாதது தான் என்கின்றனர்.

முதலை வாயில் தலை: சட்டப்படியே போவோம் என மாஸ் நடிகர் இழுத்துப் பிடித்த நிலையில், அதிலும் இடியாப்ப சிக்கலை உருவாக்கி சுத்த விட்டனர். எப்படியாவது இந்த பட பஞ்சாயத்தை முடித்தால் தான் அடுத்த படத்தையும் சிக்கல் இல்லாமல் ரிலீஸ் செய்து சம்பாதிக்க முடியும் பெரிய நஷ்டத்தையும் ஈடு செய்ய முடியும் என தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுக்க மாஸ் நடிகரும் மறுப்புத் தெரிவிக்கவில்லையாம். ஆனால், தற்போது தயாரிப்பு நிறுவனம் முதலை வாயில் தலை விட்ட கதியாக தவித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
வாய்ப்பில்லை ராஜா: இப்போதைக்கு நடிகருக்கு எதிரான ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதால் அவருக்கு எந்த பக்கமும் ஒரு சின்ன லாபம் கூட இந்த படத்தால் வந்து விடக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருப்பதாகவும் நடிகரின் படத்தின் பிசினஸை மொத்தமாய் காலி செய்து விட்ட பின்னர் தான் விமோச்சனம் கிடைக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











