Don't Miss!
- News
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கும்! வேல்முருகன் திட்டவட்டம்!
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Technology
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
மாஸ் நடிகரின் அடுத்த அப்டேட் தாமதமாக அந்த விஷயம் தான் காரணமா? தீயாக பரவும் தகவல்!
சென்னை: ஒரு படம் பெரிய வசூல் வேட்டை ஆடியதும் அந்த இயக்குநரை கையிலேயே பிடிக்க முடியவில்லையாம். தொடர்ந்து இந்த படம் என் படமா இருக்கும் என ரொம்பவே நடிகரை டோட்டல் டேமேஜ் செய்து வருவதாக பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இதற்கு முன் அந்த மாஸ் நடிகருடன் அந்த இயக்குநர் இணைந்த போது நடிகரின் பேச்சைக் கேட்டுத் தான் படமே பாதிக்கு மேல் கெட்டுப் போய் விட்டதாக மணிக்கு முப்பது முறை சொல்லி வருவதால் நடிகர் செம கடுப்பில் இருக்கிறாராம்.
இயக்குநர் ஷூட்டிங்கை ஆரம்பித்த நிலையில், இன்னமும் நடிகர் ஒரு நாள் கூட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவே இல்லை என்கின்றனர்.
தொடர்
தோல்வி..
கழுத்து
நிறைய
கடன்..
மீண்டும்
காமெடிக்கு
தாவும்
வாசனை
நடிகர்..
ரொம்ப
லேட்?

இது என் படம்
நடிகர்களின் ரசிகர்கள் முதற்கொண்டு அந்த நடிகர் வரை இயக்குநர் வார்த்தைக்கு வார்த்தை இது முழுக்க முழுக்க என் படம் என் படம் என தம்பட்டம் அடித்து வருவது நடிகரை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளதாக கூறுகின்றனர். இயக்குநருக்கு கொஞ்சம் தண்ணிக் காட்ட வேண்டும் என்கிற முடிவுடன் நடிகர் செய்து வரும் சில செயல்களால் இயக்குநரும் அப்செட் ஆகி விட்டதாக கூறுகின்றனர்.

நடிகர் செம ஜாலி
இயக்குநர் ஒரு பக்கம் அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பையே தொடங்கிய நிலையில், நடிகர் செம ஜாலியாக பார்ட்டி செய்து வருகிறாராம். இன்னமும் இயக்குநர் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த பக்கமே அவர் இன்னமும் தலை காட்டவில்லை என்கின்றனர்.

ஈகோ கிளாஷ்
போன படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், நடிகரின் படத்தை தான் இயக்குவதாக சொல்லாமல் தனது படத்தில் அந்த நடிகர் வந்து நடிக்கப் போகிறார் என வாய்க் கொழுப்பால் பெரிய பிரச்சனையை அந்த இயக்குநர் வான்டட்டாக இழுத்து விட்டுள்ளதாக கூறுகின்றனர்.

லுக் செட் ஆகல
வேண்டுமென்றே நடிகர் தனது லுக்கை சரி செய்வதற்கு கால தாமதம் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இயக்குநரை தனது வழிக்கு கொண்டு வரவே மாஸ் நடிகர் இப்படியொரு ஜித்து வேலையை செய்து வருவதாகவும் கடைசியாக நடிகரிடம் இயக்குநர் சரணடைந்தால் தான் அடுத்த படத்தின் அப்டேட்டே வெளியாகும் எனக் கூறுகின்றனர்.

இயக்குநருடன் பேச்சுவார்த்தை
நீங்க என்ன மாதிரியான படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த முறை நடிகர் தலையிட மாட்டார் தான் என்று சொல்லி இருந்தார். ஆனால், தொடர்ந்து நடிகரை அவமரியாதை செய்யும் விதமாக உங்கள் பேச்சு இருப்பதாக தெரிகிறது. அதை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் விரைவில் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என நடிகரின் அட்மின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளாராம். ஆனால், இயக்குநர் இந்த முறை உடனடியாக பணிந்து வருவது போல தெரியவில்லை என்பதாலேயே இந்த அளவுக்கு தாமதம் ஆகி வருவதாகவும் இன்னமும் லேட்டாகலாம் என்றும் கூறுகின்றனர்.