நல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி? மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்!
சென்னை: இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அந்த ஊர்க்கார இயக்குநருடன் மூன்றாவது முறையாக மாஸ் நடிகர் இணையப் போகிறாராம்.
மாஸ் நடிகர் நடித்த படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அவர், இயக்கிய அத்தனை படங்களில் அந்த இரண்டு மட்டுமே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
நோலன் இயக்குநருடன் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக, மீண்டும் பழைய படி விஸ்வாசத்துக்காக விழப் போகிறார் மாஸ் நடிகர் என்கிற அறிவிப்பு அவரது ரசிகர்களையே அதிர்ச்சியாக்கி உள்ளது.

ஊர் பாசம்
கிராமத்தில் இருந்து பிறந்து வளர்ந்த அந்த இயக்குநருக்கு அதிகமாகவே ஊர்ப் பாசம் உள்ளது. அவர் இயக்கிய அத்தனை படங்களின் பெயர்களையும் ஊர் பெயர்களாகவே வைத்து, தனது பாசத்தை மறக்காமல் காட்டி வருகிறார் அந்த இயக்குநர். பஞ்ச் வசனங்களுக்கு அவர் படத்தில் பற்றாக் குறையே இருக்காது.

இரண்டு ஹிட்
உச்ச நடிகருக்கு படம் பண்ண வேண்டும் என்கிற வெறியில் சினிமாவுக்கு நுழைந்த அந்த ஊர்க்கார இயக்குநர், அடுத்த உச்ச நடிகரான மாஸ் நடிகருக்கு கதை சொல்லி ஓகே பண்ணி இயக்குநர் ஆனார். தங்கச்சி சென்டிமென்ட் வச்சு ஒரு படத்தையும், அம்மா சென்டிமென்ட் வச்சு இன்னொரு படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார்.

மீண்டும் இணைந்து
மாஸ் நடிகருக்கு தொடர்ந்து டபுள் ஹிட் படங்களை கொடுத்த அந்த இயக்குநர் ரொம்பவே ஃபேவரைட். அந்த விஸ்வாசத்துக்காக இப்போ மறுபடியும் அவருடன் இணைந்து நடிக்கப் போவதாக கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சுக்களாக அடிபட்டு வருகின்றன. ஆனால், மாஸ் நடிகரின் ரசிகர்களுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை.

எல்லாமே ஃபிளாப்
மாஸ் நடிகரை வைத்து இரண்டு படங்களை ஹிட் கொடுத்த பின்னர், டாப் நடிகரை வைத்து அவர் இயக்கிய படம் அட்டு ஃபிளாப் ஆனது. அது மட்டுமின்றி ஏகப்பட்ட முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து ஒவ்வொரு ஊர் பெயராக எடுத்த படங்களை எல்லாம், அந்த அந்த ஊர்க்காரர்களே பார்க்க முடியாத அளவுக்கு ஆனது தான் காலக் கொடுமை.

சம்பள பஞ்சாயத்து
தியேட்டர்கள் திறந்தால் தான் படத்தை வெளியிடுவேன் என அந்த மாஸ் நடிகர் ரசிகர்களுக்காக ஒத்தை காலில் நின்று வரும் நிலையில், அவருடைய அடுத்த பட பேச்சுகள் அடிபட்டன. இந்த ஆண்டு உச்ச நடிகரை வைத்து ஓடாத படம் இயக்கிய அந்த நோலன் இயக்குநரை மீண்டும் நம்பி வாய்ப்பு கொடுத்தால், '25 சி' சம்பளமாக கேட்டு தயாரிப்பு நிறுவனத்தை அலற விட்ட பஞ்சாயத்தின் காரணமாக அவர் ஓரங்கட்டப்பட்டாராம்.

அந்த இயக்குநருக்காவது
புதுசா கிராம படங்களை இயக்கி ஹிட் கொடுக்கும் அந்த இயக்குநர் கதை சொன்னப்பவே அதற்கு மாஸ் நடிகர் ஓகே பண்ணி இருக்கலாம். இப்போ அந்த படத்தின் கதையையும் பிரகாச நடிகர் தட்டிட்டுப் போயிட்டார். வேறு வழியே இல்லாமல், பழகிய தோஷத்துக்காக ஃபீல்டு அவுட்டான இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்கப் போகிறாரே மாஸ் நடிகர், நல்லாத் தானே போயிட்டு இருக்கு, ஏன் இப்படி பண்ணுகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் ரொம்பவே ஃபீல் பண்ணுதாம்.


Click it and Unblock the Notifications











