Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அப்பாவின் மூவ் எல்லாம் அதுக்காகத்தான்.. கண்டுகாதீங்க என ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட மாஸ் நடிகர்!
சென்னை: மாஸ் நடிகரின் தந்தை புதிதாக இயக்கி உள்ள படத்திற்கு புரமோஷன் செய்ய தனது மகன் குறித்த அவதூறான பேச்சுக்களை அடிக்கடி பேசி சர்ச்சையை கிளப்ப நடிகரின் தந்தை மீது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
மாஸ் நடிகரின் தந்தைக்கு எதிராக பிரச்சனை கிளப்ப சில ரசிக நிர்வாகிகள் நினைத்த நிலையில், அவர்களை அப்படியே ஆஃப் செய்துள்ளாராம் மாஸ் நடிகர்.
மாஸ் நடிகரின் கட்டளை மீறி எதையும் செய்ய முடியவில்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
movie review : சில நாட்களாக அப்பாக்களுக்கு திடீர் மரியாதை... #ஹோம் திரைவிமர்சனம்
மாஸ் நடிகரின் தந்தை
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மகன் இருந்தும் சில மன வருத்தம் காரணமாக மகனுக்கு எதிராக மாஸ் நடிகரின் தந்தை சமீப காலமாக செயல்பட்டு வருவது நடிகரையும் அவரை சுற்றி உள்ளவர்களையும் ரொம்பவே கோபப்படுத்தி உள்ளது.
மீண்டும் இயக்கம்
பிரபல இயக்குநரான மாஸ் நடிகரின் தந்தை மீண்டும் இயக்கத்தில் பிசியாகி உள்ளார். இந்நிலையில், மகனுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட விரிசல்கள் குறித்து தொடர்ந்து பொது வெளிகளில் பேசி பிரச்சனையை கிளப்பி வருகிறார் என மாஸ் நடிகரின் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர்.
இதெல்லாம் சரியில்லை
இதெல்லாம் சரியில்லை அப்பாவை சும்மா இருக்க சொல்லுங்க என அம்மா மூலமாகவும் நடிகர் முறையிட்டு பார்த்து தொடர்ந்து மகனை வம்பிழுத்தபடியே அந்த இயக்குநர் பேசி வருவதற்கு பின்னால் ஒரு பெரிய காரணமே இருக்கிறதாம்.
எல்லாம் புரமோஷனுக்காக
அப்பா இயக்குநர் தொடர்ந்து இப்படி மகனை சுற்றியே பேசி வருவதற்கு பின்னால் அவருடைய புதிய படத்திற்கான புரமோஷன் மட்டுமே உள்ளதாக மாஸ் நடிகர் காதுகளுக்கு செய்திகள் கிடைக்கவே அவரும் இனி அந்த விஷயத்தில் நாம் தலையிட வேண்டாம் என முடிவெடுத்து அமைதி காத்து வருகிறாராம்.
ரசிகர்கள் கோபம்
ஆனால், தொடர்ந்து தங்கள் நாயகரை இழிவுப்படுத்தும் விதமாகவே அவர் குறித்து சர்ச்சை பேச்சுக்கள் வலம் வருவதை பார்த்து பொறுக்க முடியாத சில ரசிகர்கள் நடிகரிடமே இது தொடர்பாக பேசி உள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தை இப்படியே விட்டு விடுங்கள் எந்த பிரச்சனையும் பண்ண வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டுள்ளாராம் மாஸ் நடிகர்.
ரொம்ப பிசி
அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் மாஸ் நடிகர் தன்னை வைத்து தன் அப்பா புரமோஷன் தேடிக் கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டு அந்த விவகாரத்தில் தலையிடாமல் தனக்கு வரிசை கட்டி காத்திருக்கும் படங்களில் செம பிசியாகி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.