அவங்கள கதற விட போறாரு.. நிச்சயம் அது இருக்கு.. மாஸ் நடிகரின் வெறித்தனத்தை பார்க்கப்போறாங்க!

சென்னை: தான் உண்டு தன் வேலை உண்டு என தொடர்ந்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் அந்த கோலிவுட் வசூல் நாயகனை, தொடர்ந்து ஒரு க்ரூப் டார்கெட் செய்து தொல்லை கொடுத்து வருகிறது.

விரைவில் நடைபெற உள்ள அந்த மாஸ் நடிகரின் பட விழாவில், நிச்சயம் அவங்கள கதற விட போறாராம்.

ஏற்கனவே தனக்கு ஆப்பு வைக்க நினைப்பவர்களுக்கு, ஒவ்வொரு ஆப்பாக பாடல்கள் மூலமாக சொருகி வரும் அந்த நடிகர், தனது இன்னொரு வெறித்தனமான முகத்தை காட்டப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அரசியல் பேச்சு

அரசியல் பேச்சு

உச்ச நடிகர் இப்போ இல்லாட்டி எப்போன்னு பாடிட்டு போன அந்த இடத்துல, இன்னைக்கு மாஸ் நடிகர் தனது அரசியல் பேச்சால் தெறிக்க விடப் போவது கன்ஃபார்ம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து, அந்த நடிகரை மட்டும் டார்கெட் செய்து கொடுத்த தொல்லைகளுக்கு நிச்சயம் மரண அடி காத்துக்கிட்டு இருக்காம்.

சும்மா கிடந்த சங்கு

சும்மா கிடந்த சங்கு

சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க, அதுபோன்ற ஒரு பழமொழியைத்தான் அந்த மாஸ் நடிகரும் பேசப் போறாராம். தனக்கு கொடுத்த தொல்லைகளை கணக்கு வைத்திருக்கும் அந்த நடிகர், ஒட்டுமொத்தமாக அதை பைசல் பண்ணும் முடிவில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

செம கெத்து

செம கெத்து

தனது புதிய படத்தின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டுள்ள அந்த மாஸ் நடிகர், செம கெத்தாக படம் குறித்தும், தனது ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் பேச உள்ளார். வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்தி விடாமல், இந்த முறை அடுத்த கட்டத்திற்கான சிக்னலையும் அந்த மாஸ் நடிகர் கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மோதிப் பார்க்காதே

மோதிப் பார்க்காதே

என் வழி தனி வழின்னு போயிட்டு இருக்கேன், வீணா என்னை சீண்டிப் பார்க்காதே அப்புறம் தாங்க மாட்ட என்கிற ரேஞ்சில் அந்த மாஸ் நடிகர் கடுகடுக்க உள்ளார். பொறுமைக்கும், அமைதிக்கும் ஒரு எல்லை உண்டு அதையும் மீறி தேவையில்லாமல், ஒருத்தரை சீண்டினால், நிச்சயம் அதற்கான கூலியை அவர்கள் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கருத்தை மனதில் நிறுத்தியுள்ளாராம் அந்த மாஸ் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X