நண்பருக்கு தயாரிப்பாளர் கிடைக்கலையா?.. ரூட்டை க்ளியர் பண்ண பக்கா வேலை செய்யும் மாஸ் நடிகர்?
சென்னை: மாஸ் நடிகர் ரூட்டை மாற்றிய நிலையில், தனது ரூட்டில் நண்பருக்கு ஒரு படம் பண்ணலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. கூடிய விரைவில் அறிவிப்பு மட்டும் வந்துவிட்டால் பல பேருக்கு புகை கிளம்பிவிடும் என்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே அந்த கட்சிக்கு எதிராகவே டாப் நடிகர் எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த நிலையில், மாற்றத்தை நோக்கி முதல் ஆளாக அவரும் தனது ஆதரவை கொடுத்தது மாஸ் நடிகரை ரொம்பவே ஹேப்பி ஆக்கியுள்ளதாம்.

இந்நிலையில், ரகசிய சந்திப்பு ஒன்றும் சமீபத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே குட் நியூஸ் வரும் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
நண்பர்களுக்கு உதவி செய்ய முடிவு: தான் வேறு ரூட்டில் பயணிக்கத் தொடங்கினாலும் தனது மனம் எப்போதுமே ஆரம்பித்த இடத்தில் தான் இருக்கும் என்பது தான் மாஸ் நடிகரின் மன நிலையாக உள்ளது என்கின்றனர். தனக்கு போட்டியாக இருந்த நண்பர்கள் மட்டுமே தனக்கு பிறகு அந்த இடத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் உச்ச நடிகருக்கு எப்போதுமே டஃப் போட்டியை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக மாஸ் நடிகர் உள்ளார் என்கின்றனர்.
அந்த பக்கம் சாய்க்க திட்டம்: டாப் நடிகருக்கு பெரிதாக தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்கிற சூழல் நிலவி வரும் நிலையில், அவரை தங்கள் வசம் இழுக்க பெரும்புள்ளியும் பக்கா பிளான் போட்டு அந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் மூலம் இழுக்க பிளான் போட்டு வருகிறார்களாம். ஆனால், அந்த பக்கம் போனால் சரியா இருக்காது, நம்ம பக்கம் வைத்துக் கொண்டால் தான் எதிர்காலத்தில் எந்தவொரு ஆபத்தும் இருக்காது, படை வலுவடையும் என்கிற திட்டத்துடன் மாஸ் நடிகரும் தனது ரூட்டுக்கு டாப் நடிகரை கொண்டு வர பிளான் போட்டுள்ளார் என்கின்றனர்.
முடிவு டாப் நடிகர் கையில்: இப்படி இரண்டு பக்கமும் திடீரென டாப் நடிகருக்கு ஆஃபர்கள் குவியும் நிலையில், சரியான முடிவை சீக்கிரமே எடுத்துச் சொல்கிறேன் என டாப் நடிகர் கூறியுள்ளாராம். கூடிய சீக்கிரமே மாஸ் நடிகருக்கு சாதகமான பதிலை தான் டாப் நடிகர் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறுகின்றனர். என்ன நடக்கிறது என்பதை வெயிட் பண்ணி வாட்ச் பண்ணுவோம்.


Click it and Unblock the Notifications