பாக்ஸ் ஆபீஸ் டவுட்டு தான்.. ரிலீஸுக்கு முன்னாடியே முடிஞ்ச வரை லாபத்தை கறந்துட மாஸ் நடிகர் திட்டம்?
சென்னை: அந்த ரீமேக் படத்துக்கு பெரிதாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் எல்லாம் வருமா என்பது டவுட்டு தான் என்கிற முடிவுக்கே மாஸ் நடிகரும் படத்தின் தயாரிப்பாளரும் வந்துவிட்டதாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே முடிந்த வரை ரசிகர்களிடம் இருந்து எமோஷனல் பிளாக்மெயில் செய்து முடிந்த வரை பெரிய தொகையை சுருட்டி விட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மாஸ் நடிகரை நம்பி அவருக்கு பல கோடி சம்பளம் கொடுத்து படத்தை உருவாக்கிய நிறுவனம் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? போட்ட காசை திருப்பி எடுப்போமா என ஏகப்பட்ட சிந்தனையில் தவித்து வந்த நிலையில், அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை என்றும் படம் வெளியாவதற்கு முன்பாகவே பெரிய பிசினஸை நான் பண்ணித் தரேன் என மாஸ் நடிகர் தரப்பு தயாரிப்பாளர் டென்ஷனை மொத்தமாக குறைத்துள்ளதாக கூறுகின்றனர்.

வழக்கம் போல இந்த முறையும் ரசிகர்களின் பாக்கெட்டில் பெரிதாக கை வைத்து விட்டால், போதும் பாக்ஸ் ஆபீஸ் பிரச்சனை, லாப பிரச்சனை என எதுவுமே வராது என பக்காவாக திட்டம் போட்டு ஏகப்பட்ட ஏற்பாடுகளை தயாரிப்பு தரப்புக்கு ஃபேவராக நடிகர் செய்துக் கொடுத்துள்ளார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
பிளாக் டிக்கெட் முதல் பாலாபிஷேகம் வரை: டாப் ஹீரோக்கள் டாப் ஹீரோக்களாக இருக்க முக்கிய காரணமே ரசிகர்கள் தான். ஆரம்பத்தில், நடிகர்கள் நல்லா நடித்து ரசிகர்களை கவர்ந்து அவர்களின் கைதட்டல்களை பெற்று விடுகின்றனர். அதன் பின்னர், ரசிகர்கள் வேறு வழியின்றி குறிப்பிட்ட ஒரு நடிகருக்கு ரசிகராக இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு தள்ளப்பட அப்படியே சிறை கைதிகளாக சிக்கி முதல் நாள் ஷோவுக்கு அதிக விலைக்கு டிக்கெட் வாங்குவது முதல் பாலாபிஷேகம், பட்டாசு, டிஜே என ரசிகர் மன்றத்தில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக செலவு செய்து வருகின்றனர்.
ரசிகர்களின் பாக்கெட்டில் இருந்து: மாஸ் நடிகரின் படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், அவர் ஜாலியாக ரசிகர்களின் பாக்கெட்டில் இருந்து காசு எடுத்து படம் வெளியாவதற்கு முன்னாடியே பாக்ஸ் ஆபீஸில் வெற்றி கோட்டையை கட்டி இத்தனை வருடங்கள் ஓட்டி விட்டார். இந்நிலையில், இந்த முறை முடிந்தளவுக்கு ரசிகர்களின் பாக்கெட்டுகளை எம்டி செய்துவிடலாம் என்கிற பக்கா திட்டத்துடன் தயாரிப்பு நிறுவனத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுக்க ஏகப்பட்ட வழிகளில் லாபத்தை ஈட்ட தயாரிப்பு நிறுவனம் தீயாக வேலை செய்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











