எது வந்தாலும் பார்த்துக்கலாம்.. தயாரிப்பாளருக்கு தைரியம் சொன்ன மாஸ் நடிகர்.. ஏகப்பட்ட கத்தியாம்!

By Staff

சென்னை: மாஸ் நடிகர் படத்துக்கு மட்டுமில்லை அவரது நிகழ்ச்சி நடைபெறக்கூட ஏகப்பட்ட கத்திகள் அவரை போட்டுத்தள்ள பார்த்து வருவதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

சில உச்ச நடிகர்களின் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எந்தவொரு சர்ச்சையோ, சிக்கலோ இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக நடந்து வரும் நிலையில், மாஸ் நடிகருக்கு மட்டும் எப்போதும் பிரச்சனைகள் பின்னாடி வந்து தாக்க காரணமே அவரது அரசியல் பயணம் தான் என்கின்றனர்.

Mass actor plans to solve all the problems before the movie release

திட்டமிட்டபடி நிகழ்ச்சியை நடத்த விடக் கூடாது என நடிகருக்கு எதிராக ஏகப்பட்ட சதி நடப்பதாகவும் அதன் காரணமாக என்ன சார் பண்றது என பதறி தயாரிப்பாளரை அழைத்து பக்குவமாக பேசி எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் என நம்பிக்கை கொடுத்திருப்பதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

உச்ச நடிகர் சைடில் இருந்து பிரஷர்: உச்ச நடிகருக்கும் மாஸ் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படம் மற்றும் படம் குறித்த நிகழ்ச்சி என எது நடந்தாலும், அந்த நடிகரின் ரசிகர்கள் திட்டம் போட்டு வேட்டு வைக்க ஏகப்பட்ட பிளான்களை போட்டுள்ளதாக ஒரு பக்கம் புகைந்து வருகிறது.

இதுவரை இறங்கி அடிக்காத உச்ச நடிகரின் ரசிகர்கள் பலரும் இந்த முறை சரியான நேரத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

டாப் நடிகர் தரப்பில் இருந்தும் டார்ச்சர்: போட்டி நடிகராக வலம் வரும் டாப் நடிகரின் ரசிகர்கள் மத்தியில் இருந்தும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் சமூக வலைதளங்களை தாண்டியும் டைரக்ட்டாக இந்த முறை இருக்கும் என்றும் கூறுகின்றனர். படம் வெளியானால், இமிடியேட்டாக நெகட்டிவிட்டியை பரப்ப பக்கா ஸ்கெட்ச் போட்டிருப்பதாக கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெற்றாலும் ஒரு சின்ன தப்பு நடந்தாலும், தட்டித் தூக்க ரெடியாக உள்ளனர் டாப் நடிகரின் ரசிகர்கள்.

அரசியல் தரப்பில் இருந்தும் ஆப்பு: இதுபோதாது என நடிகர் அந்த நிகழ்ச்சியே அரசியல் மேடையாக மாற்றிவிட்டால் என்ன செய்வது என அரசியல் தரப்பில் இருந்தும் ஆப்பு ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர்.

எந்த வகையில் எல்லாம் செக் வைக்க முடியுமோ மாஸ் நடிகருக்கு செக் வைக்க ஏகப்பட்ட கத்திகள் கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பதால் தயாரிப்பாளருக்கு அல்லு இல்லை என்கின்றனர்.

நடிகர் கொடுத்த நம்பிக்கை: இப்போ தானா, ரொம்ப வருஷமா இதை பார்த்து பழகிடுச்சு, எதுக்கும் கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியா நடக்கும்... நீங்க ஆக வேண்டிய வேலைகளை பாருங்க, பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறது என்பதை நான் பார்த்துக்கிறேன் என நம்பிக்கை அளித்த நிலையில், தான் தயாரிப்பாளரின் டென்ஷன் கொஞ்சம் குறைந்திருப்பதாக கூறுகின்றனர்.

அந்த நிகழ்ச்சி மற்றும் படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் வரை தயாரிப்பாளருக்கு தூக்கமே கிடையாதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X