மாஸ் நடிகருக்கு வலை வீசும் அரசியல் புள்ளி.. மாட்டிக் கொள்ள மறுக்கும் நடிகர்.. என்ன நடக்கிறது?
சென்னை: அரசியலில் மாஸ் நடிகர் நேரடியாக களமிறங்காமலே தனது ரசிகர்களை வைத்து அழகாக வெற்றிகளை குவித்து வருகிறார்.
சரியான திட்டமிடலுடன் தான் அதில், இறங்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாராம் நடிகர்.
அதை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டதில் தான் அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே பிரச்சனையே வெடித்தது என்கின்றனர். இந்நிலையில், அரசியல் புள்ளி ஒருவர் மாஸ் நடிகரை சந்தித்ததாக வைரலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அரசியல் நெருக்கடி
மாஸ் நடிகரை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்பதற்காக அவரது வழக்குகள் முடுக்கி விடப்பட்டு அவருக்கு எதிரான வேலைகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. உச்ச நடிகரை போலவே மாஸ் நடிகரும் கடைசி வரை அரசியலை வைத்து சினிமாவில் சம்பாதித்து எஸ்கேப் ஆகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர்.

இப்போதைக்கு வேண்டாம்
ஆனால், மாஸ் நடிகருக்கு அந்த ஆசை இருந்தாலும், இப்போதைக்கு வேண்டாம் என்றும் படிப்படியாக அதற்கான பணிகளையும் ரசிகர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தும் பணியிலும் தீவிரமாக ஆலோசித்து காய்களை நகர்த்தி வருகிறார் என கூறப்படுகிறது. அதே சமயம் சரியான நேரத்தில் தனது கருத்துக்களையும் முன் வைக்காமல் இருந்து விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

அந்த கட்சிக்கு ஆதரவு
ஒவ்வொரு முறையும் மாஸ் நடிகர் பொதுவெளியில் தென்படும் போதெல்லாம் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் மாஸ்க்குகள் நிறம் வரை வைத்து சில கட்சியினர், தங்கள் கட்சிக்குத் தான் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறார் என கிளப்பி விட்டு ஸ்கோர் செய்ய பார்த்து வருகின்றனர்.

அரசியல் புள்ளி பேச்சுவார்த்தை
இந்நிலையில், அந்த நடிகை எப்படியாவது தங்கள் பக்கம் வளைத்துப் போட வேண்டும் என்றும் எதிர் தரப்புக்கு அவர் சென்று விடக் கூடாது என்பதிலும் அந்த பெரிய கட்சி உறுதியாக இருப்பதாகவும், மாஸ் நடிகரின் படங்களையும் அந்த கட்சிக்கு நெருக்கமான நிறுவனமே தொடர்ந்து தயாரித்து வருவதற்கு காரணமும் அதுதான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த கட்சிக்கு தேர்தல் களத்தில் அறிவுரை வழங்கி வந்த அந்த அரசியல் புள்ளி சமீபத்தில் நடிகரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

முதல்வருடன் சந்திப்பு
பக்கத்தில் இருக்கும் பிரதேசத்தின் முதல்வரையும் சமீபத்தில் அந்த மாஸ் நடிகர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவருடன் என்ன பேசினீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கும், நடிகரின் அரசியல் நிலைப்பாடு என்னதான் என்பதை புரிந்து கொள்வதற்குமே அந்த அரசியல் புள்ளி அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

சந்திக்கவே இல்லை
ஆனால், நடிகரின் தரப்பில் இருந்து அப்படியொரு சந்திப்பே நடைபெறவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், பொறுமையாகத்தான் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க முடியும் என்பதிலும் அந்த நடிகர் திட்டவட்டமாக இருப்பதால் தான் இந்த சந்திப்பு நடக்கவே இல்லை என மறுத்துள்ளனர் என்கின்றனர்.

பேச வேண்டாம்
இந்த சந்திப்பின் போது, நடிகரும் அரசியல் தலைவரின் மகனுமான அந்த பிரபலம் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியும் வேண்டாம் அதில், தான் பேசப் போவதுமில்லை என நடிகர் அதிரடியாக கூறிவிட்டார் என்றும் கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











