எவ்ளோ அடிக்கிறீங்களோ அடிங்க.. அவ்வளவும் எனக்குத்தான் புரமோஷன்.. மகிழ்ச்சியில் மாஸ் நடிகர்!

By Staff

சென்னை: தங்களை மீறி வேற எவனும் வரக்கூடாது என்கிற மனநிலையில், எதிர்த்து நிற்கும் மாஸ் நடிகரை பெரும்புள்ளி ஒட்டுமொத்தமாக சோலியை முடிக்க அனைத்து வகையிலும் ஆப்பு வைத்து வருகிறாராம். ஆனால், அதை எல்லாம் பார்த்து மாஸ் நடிகர் அப்செட் ஆகாமல் மகிழ்ச்சியில் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சொந்த பிரச்னை ஒரு பக்கம் மனதை புண்ணாக்க பொதுப் பிரச்னையும் மாஸ் நடிகரின் உடம்பை புண்ணாக்கி விடும் நிலையில் உள்ளது என்கின்றனர். எல்லாருமே இவன் ரொம்ப நல்லவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என பந்தாடி வரும் நிலையில், மாஸ் நடிகர் மனம் கலங்காமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்கின்றனர்.

Mass Actor remains calm with smiling face after several pressure against him due to this reason
Photo Credit:

வடிவேலு ஒரு படத்தில் எல்லாரும் என்னைய போட்டு அடிச்சா சந்தோஷம் தான், அதையே அனுதாபமாக்கி வெற்றி பெற்று விடுவேன் என்றும் இதெல்லாம் எனக்கு புரமோஷன் தான் கவலையை விடுங்க என நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் தனது சகாக்களிடம் சொல்லி தேற்றியுள்ளதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

ஆல் ஏரியாவிலும் அடி: ஒரு பக்கம் வீட்டு பிரச்னை இன்னொரு பக்கம் ஃப்யூச்சர் பிரச்னை, அந்த பக்கம் திரும்புனா எதிர் தரப்பு ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது, இந்த பக்கம் திரும்புனா சில்றைகள் எல்லாம் சிரிப்பா சிரிக்குது என ஆர் ஏரியாவிலும் மாஸ் நடிகர் அடிவாங்கிக் கொண்டிருக்கிறார். துன்பம் வரும் நேரத்துல சிரிங்க என்பது போல தான் தற்போது நடிகர் கதறி அழாமல் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் அண்ணாந்து பார்த்து சிரிப்பது போல சிரித்துக் கொண்டிருக்கிறாராம்.

மகிழ்ச்சியா இருக்கும் மாஸ் நடிகர்: கூட இருப்பவர்களே இவ்வளவு பிரச்னைகளையும் எப்படி தலைவா சமாளிக்கிறீங்க எப்படி உங்க முகத்துல சிரிப்பு வருது என்றே கேட்டு விட்டார்களாம். அப்படி கேட்டவர்களிடம் தான் எவ்வளவு அடிக்கிறாங்களோ அவ்வளவும் நமக்கு அனுதாபமாக மாறும் அதனால் தான் நமக்காக ஃப்ரீ புரமோஷன் பண்றவங்கள நினைச்சி சிரிச்சிட்டு இருக்கேன் என்று மாஸ் நடிகர் மண்டையை கழுவியதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. வீட்டுல பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், குடும்பத்துக்காக கொள்ளையடிக்க மாட்டாரு என்றும் நாட்டுக்காக உழைப்பாரு என்றும் மக்கள் சப்போர்ட் நமக்குத்தான் அதிகரிக்கும் என பக்காவாக கணக்குப் போட்டு தனது டீமை திடப்படுத்தியுள்ளாராம்.

புது டார்ச்சர்: மற்றவர்களின் பிரச்னையை கூட சமாளித்து விடுவேன். ஆனால், இப்போ புதுசா ஒரு டார்ச்சரை கூட ஏன் தான் சேர்த்துக் கொண்டேன் என தெரியவில்லை. சும்மா இருக்காமல், எரிகிற எண்ணெய்யில் பெட்ரோல் ஊத்திக்கிட்டு இருக்கு என்றும் தனது புதிய டார்ச்சர் குறித்து மட்டும் புலம்பினார் என கிசுகிசுக்கள் சுடச்சுட கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X